(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“பின்னே எனக்கு இங்கே வேற என்ன என்டர்டேயின்மென்ட் இருக்கு... இந்த ஓல்ட் பிப்புள் பேசுறதை எவ்வளோ நேரம் அலுக்காம கேட்குறது... சீக்கிரமா கல்யாணம் செய்துட்டு எங்க வீட்டுக்கு வந்திடு... ஷ்யாமை இரண்டு பேருமா டீஸ் செய்து பொழுதை ஓட்டுவோம்...”

   

ரேஷ்மி இப்போதும் சத்தம் போடாமல் சிரித்தாள்...

   

“என்னை விட்டா நான் இப்போவே கூட வந்திருவேன் கவி... ஆனால் இந்த பெரியவங்க கல்யாண பேச்சை எடுத்தா தானே...”

   

“ஹையோ, அவங்க பேச்சை எடுத்து நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கனும்னா இன்னும் நாலு அஞ்சு வருஷம் ஆகும்... அதெல்லாம் சரி படாது... பேசாம ஓடி போய் கல்யாணம் செய்துக்கோங்க... நான் வேணா சாட்சி கையெழுத்து போடுறேன்... இரண்டு வீட்டு பெரியவங்களும் அப்போ எப்படி காச், மூச்சுன்னு கத்துறாங்கன்னு பார்ப்போம்... சூப்பர் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்...”

   

“கேட்கவும் இன்ரஸ்டிங்கா தான் இருக்கு... ஆனால் உன் அண்ணன் ஓடி வருவானா?? அவனை என்னால தூக்கிட்டு எல்லாம் ஓட முடியாதே, என்ன செய்றது....???”

   

“ச்சேய்... பேசாம வேற யாரையாவது லவ் செய்யேன்...”

   

“ஹோய்... என்ன நீ???”

   

“சரி, சரி மிரட்டாதே ரேஷூ... எப்போ தான் உன் சித்தி கிட்ட ஷ்யாம் பத்தி சொல்ல போற?”

   

“சீக்கிரமே சொல்லனும் கவி...”

   

அவர்களின் பேச்சை நிறுத்துவது போல, பெரியவர்கள் காரில் ஏற தொடங்க, இருவரும் தங்களின் அரட்டையை அப்படியே விட்டு விட்டு காரினுள் ஏறி அமர்ந்தார்கள்...

   

கவிதா மட்டும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புவதாக சொல்லவும் அவளை வழி அனுப்பி விட்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.