(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

ஹேமாவின் கேள்வி ரேஷ்மியை இந்த உலகத்திற்கு அழைத்து வந்தது....

   

என்ன சொல்வது என்று புரியாமல் அவள் விழிக்க,

   

“எந்த ஸ்பெஷலைசேஷன் எடுக்க போறேன்னு கேட்குறாங்க...?” என்று ஹேமாவின் கேள்வியை மீண்டும் சொன்னாள் ரோஷனி...

   

“ஆக்சுவலி சித்தி... கோவிச்சுக்காதீங்க... நான் மெதுவா உங்க கிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன்... இப்போ ஆன்ட்டியும் இருக்காங்க... சொல்லிடுறது தான் சரி... நான்... நான் வேற ஐடியா வச்சிருக்கேன்,” என்றாள் ரேஷ்மி தயக்கத்துடன்!

   

ரோஷனி, ஹேமா இருவரும் கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்! பின்,

   

“வேற ஐடியாவா??? என்ன ஐடியா ரேஷூ???” என வினவினாள் ஹேமா!

   

“யூ.எஸ்ல போய் படிக்கலாம்னு இருக்கேன் ஆன்ட்டி...”

   

சட்டென, “அவ்வளவு தூரமா??? அதெல்லாம் வேண்டாம்... இங்கே இல்லாத படிப்பா??” என்றாள் ரோஷனி!

   

“இல்லை சித்தி... நான் ரிசர்ச் சைட் போகலாம்னு இருக்கேன்... கேன்சருக்கு cure கண்டுப்பிடிக்குறது தான் என்னோட லட்சியம்... என்னை மாதிரி யாரும் இந்த வியாதினால பிடிச்சவங்களை இழக்காத நாள் வரனும்... என் அம்மாவுக்காக நான் செய்ய நினைக்குறது இது...”

   

“நல்ல விஷயம் தான் ரேஷூ கண்ணா... ஆனா உன்னை தனியா அவ்வளவு தூரம் அனுப்பிட்டு நாங்க இங்கே நிம்மதியா இருக்க முடியுமா???”

   

“என்ன சித்தி நீங்க? இந்த வாட்ஸ்-அப் யுகத்துல இப்படி பேசுறீங்க??? டெய்லி உங்க கிட்ட 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.