“ஏழு மணிக்கே கிளம்பிட்டேன்க்கா... ஷேர் ஆட்டோ, பஸ் பிடிச்சு வர ஒன்பது ஒன்பதரை ஆகிடுது... நிறைய நாள் வேற இடத்துக்கும் போக வேண்டி இருக்கு... அங்கே இருந்து நினைச்ச நேரத்துக்கு கிளம்ப முடியுமா?”
“ப்ச்... வீடு கொஞ்சம் மெயின் ரோடுல இல்ல வெளிச்சமா இருக்க இடத்துல இருந்தாலாவது பரவாயில்லை... இந்த காலனி மக்கள் ஆறு மணி ஆனா கதவை மூடிட்டு சீரியல் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க... முன்னாடிலாம் கண்ணுக்கு எட்டின தூரத்துல வீடு இருந்தா கூட தைரியமா நடக்கலாம்... இப்போ எல்லாம்... என்ன செய்றது...? பேசாம, உன் கம்பெனி பக்கத்திலேயே வீடு பார்க்கக் கூடாதா??”
என்ன இப்படி ஒரு கேள்வி என்பது போல அதிர்ச்சியுடன் சுலோச்சனாவை பார்த்தாள் சரண்யா...
“இங்கே எனக்கு இருக்க ஒரே துணையே நீங்க தான் அக்கா... நான் வேற எங்கே போறது சொல்லுங்க...”
“ஹும்... கடவுளுக்கு கண்ணில்லாம போச்சு... வேற என்ன சொல்ல... சரி, சரி நீ போய் ஏதாவது சாப்பிடு... ரொம்ப டையர்டா தெரியுற...”
“மத்தியானத்துல இருந்தே தலை வலியும், உடம்பும் வலியும் இருக்குக்கா... ஒரு மாத்திரை போட்டேன்... ஆனாலும் ஒரு மாதிரி தான் இருக்கு...”
“அடடா... இது தெரியாம நான் வேற உன்னை நிக்க வச்சு பேசிட்டே இருக்கேன் பாரு... நீ போய் சாப்பிட்டு சீக்கிரமா தூங்கு... நான் அந்த கான்ஸ்டபில் கிருஷ்ணன் கிட்ட திரும்பவும் சொல்றேன்...”
“சரிக்கா...”
நிஷாவை அழைத்துக் கொண்டு வீடு வந்த சரண்யா, சுலோச்சனா தந்திருந்த காரக் குழம்பை வைத்து சாதம் பிசைந்து நிஷாவிற்கு ஊட்டி விட்டாள். பின் அவளும் பேருக்கு இரண்டு