(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

அவளை கட்டி அணைத்துக் கொண்டாள்.

   

சரண்யாவிற்கும் மகளின் அந்த அணைப்பு தேவையாக தான் இருந்தது! 

   

“நிஷா கொஞ்சமா தான் சாப்பிட்டா சரண்யா... நீயும் கொஞ்சம் ஊட்டி விடு... உங்க இரண்டு பேருக்குமா காரக் குழம்பு எடுத்து வச்சிருக்கேன்,” என்ற சுலோச்சனாவிற்கு சரண்யாவின் முகத்தை பார்த்தே எதுவோ சரியில்லை என்பது புரிந்தது...

   

“ஏன் சரண்யா ஒரு மாதிரி இருக்க?”

   

சரண்யா பதில் சொல்லாமல் நிஷாவை பார்க்கவும்,

   

“நிஷா கண்ணா, ஓடி போய் தாத்தா கிட்ட பை, குட் நைட் சொல்லிட்டு வா,” என்றாள் சுலோச்சனா...

   

அவள் சொன்னதை செய்ய நிஷா துள்ளி குதித்து ஓடிச் செல்லவும்,

   

“இப்போ சொல்லு... ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?” என்று மீண்டும் கேட்டாள் சுலோச்சனா...

   

வழியில் நடந்ததை கலக்கத்துடன் சொன்ன சரண்யா,

   

“இப்படி மேலே விழுற மாதிரி பக்கத்துல எல்லாம் வரப்போ பயமாருக்குக்கா,” என்றாள்..

   

“என்ன பொண்ணு நீ... அமைதியாவா வந்த, நல்லா நாலு வார்த்தை கேட்டு திட்ட வேண்டியது தானே?”

   

சரண்யா அமைதியாக இருந்தாள்...

   

“இப்படி அமைதியா பயந்துட்டு இருந்தா இந்த காலத்துல பிழைக்க முடியாது சரண்யா...! சரி, நீ ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரமா கிளம்பி வர முடியாதா?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.