நடையுடன் நடந்தான்! நேராக அவனின் கார் இருக்கும் இடத்திற்கு வந்து தான் நின்றான்!
காரில் அமர்ந்து, அதை ஸ்டார்ட் செய்யாமல், ஸ்டீயரிங்கை கைகளில் கெட்டியாக பிடித்தபடி அமர்ந்திருந்தான்... அவனுக்குள்ளே சில பல கேள்விகள் படையெடுத்தது!
எதனால் அன்று காலையில் சரண்யா அவனுக்கு உதவியது அவனுக்கு தெரிய வர வேண்டும்...?
எதனால் இத்தனை நாட்கள் கண்ணில் படாத அந்த கப்போர்ட் இன்று அவனின் கண்ணில் பட வேண்டும்?
எதனால் சரண்யாவின் அந்த ஃபோட்டோ அவனின் கல்லான மனதையும் இளக்க வேண்டும்???
எதனால் சரண்யாவிடம் நேரில் அந்த பேப்பர்களை கொடுக்க அவனுக்கு தோன்ற வேண்டும்???
ஒரு கேள்விக்கும் அவனுக்கு விடை தெரியவில்லை... ஆனால் சரண்யாவின் மீதான அவனின் பார்வை மாறிப் போயிருப்பதை மித்ரனால் உணர முடிந்தது...
அந்த மாற்றத்தின் மீது அவனுக்கு சின்னதாக சந்தேகம் இருந்தாலும், அவன் அருகே இருந்த ஃபைலில் இருந்த அவளின் ஃபோட்டோ... சரண்யாவிடம் கொடுக்க என கொண்டு வந்து, கொடுக்காமல் அவன் திருப்பி எடுத்து வந்த அந்த ஃபோட்டோ... மித்ரனுக்கு உண்மையை உரக்க, மிக உரக்க உரைத்தது...!
✽✽✽
வாட்சில் நேரம் பார்த்து விட்டு நடையின் வேகத்தை அதிகமாக்கினாள் சரண்யா! அவளின் தலை விண்ணென்று வலித்தது! மதியம் முதலே ஆரம்பித்திருந்த தலைவலி, மாத்திரை போட்ட பின்பும் குறையாமல் அப்படியே இருந்தது! அதெல்லாம் போதாதென்று இன்று பார்த்து அவள் வந்த பஸ் வேறு வழியில் ப்ரேக் டவுன் ஆகிப் போனது!