(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“அன்னைக்கு கோவில்ல அந்த சாமியார் சொன்னதுக்காக மட்டுமில்லை, நேத்து நீங்களும் கல்யாணம் பத்தி என் கிட்ட பேசவும், எனக்கு நல்ல சிக்னலா தெரிஞ்சது... அதனால நந்திதா கிட்டேயே நேரா பேசிடலாம்னு போய் என் மனசுல இருக்கிறதை அவக் கிட்ட சொல்லிட்டேன்... ஆனால் அவளுக்கு என்னை பிடிக்கலையாம்...”

   

ரேவதி ஆச்சர்யத்துடன் ஏன் என்பது போல உதயை பார்த்தாள்...

   

கேட்காத கேள்வியை புரிந்துக் கொண்டவனாக, “உங்களுக்கு பிடிச்ச பொண்ணை தான் நான் கல்யாணம் செய்துக்கனுமாம்... எனக்கு அட்வைஸ் கொடுத்து திருப்பி அனுப்பிட்டா,” என்றான் உதய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பெருமூச்சுடன்!

   

ரேவதியின் முகத்தில் இப்போது யோசனை தோன்றி இருந்தது...! ஆனால் இப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.

   

“நந்திதாவுக்கும் என்னை பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்மா... ஆனால் அவளுக்கும் என்னை மாதிரியே குழப்பம் இருக்கும் போலருக்கு... என் கிட்ட அந்த சாமியார் அட்வைஸ் செய்தது மாதிரி அவளுக்கும் யாராவது அட்வைஸ் செய்தால் தான் உண்டு...”

   

தன் யோசனையில் இருந்து வெளியே வந்த ரேவதி, “நீ சொல்ற அந்த சாமியாரை நான் அந்த கோவில் பக்கத்துல எங்கே பார்க்க முடியும்?” என மகனிடம் வினவினாள்.

   

“அந்த கோவில் பக்கத்துல ஒரு ப்ளே க்ரவுண்ட் இருக்கும்... அங்கே ஒரு அரச மரம் இருக்கும்... அது பக்கத்துல தான் நான் அவரை பார்த்தேன்...”

   

“சரி... எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் உதய்... நானே இந்த நந்திதா விஷயத்தை பத்தி திரும்ப உன் கிட்ட பேசுறேன்...”

   

பேச்சை வளர்க்காமல், “சரிம்மா,” என உடனடியாக ஏற்றுக் கொண்டான் உதய்! 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.