(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“சரி, நான் தான் மாத்தி பேசுறேன்... நீங்க மட்டும் என்னை வேவு பார்க்க ஆள் வைக்கலாமா???? டிரைவர் ஆரம்பிச்சு, இதோ இந்த ப்ரியா வரைக்கும் எல்லோருக்கும் எக்ஸ்ட்ரா அந்த வேலை தானே??? உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா????”

      

ரேவதி அமைதியாக இருந்தாள்...

   

“அதெல்லாம் பரவாயில்லைம்மா... விடுங்க... உங்களுக்கு பிடிச்ச பொண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு ஏன் சொன்னேன் தெரியுமா, நந்திதாவை உங்களுக்கு பிடிக்கும்ன்னு எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை...”

   

“நல்ல நம்பிக்கைடா...! அந்த நந்திதா உன்னை விட பெரியவ!”

   

“தெரியும்மா... அதனால தான் முதல்ல எனக்கே குழப்பமா இருந்தது... அவ மேல ஈர்ப்பு வருதே எனக்கு ஏதாவது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமா இருக்குமான்னு கூட சந்தேகமா இருந்தது... ஆனால் உங்க கூட இரண்டு மாசத்துக்கு முன்னாடி மாம்பலம் கோவில் வந்தேன் பாருங்க அப்போ தான் எல்லாம் தெளிவாயிடுச்சு...”

   

ரேவதி மகனை சந்தேகமாக பார்த்தாள்...

   

“நீ கோவிலுக்கு உள்ளே கூட வர மாட்டீயே??? என்ன சொல்ற?”

   

“ஆமாம்மா... நீங்க கோவில் உள்ளே போயிருந்தப்போ நான் கார் பார்க் செய்துட்டு பக்கத்துல இருந்தேனா... அப்போ பெரிய தாடி எல்லாம் வச்சுட்டு காவி டிரஸ் போட்ட ஒருத்தர் அங்கே இருந்தார்...”

   

“யாரு?”

   

“எனக்கென்ன தெரியும்? நான் எதுவுமே கேட்காம அவரே என் கிட்ட வந்து, உன் மனசுல பெரிய குழப்பம் இருக்கு... இது சரியா? தப்பா? ஏன்?ன்னு எல்லாம் உனக்குள்ளே பல பல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.