Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“அதோ, அவங்க தான் கணேஷ்... அந்த அஞ்சு பேர்,” என அவளிடம் வம்பு செய்தவர்களை அடையாளம் காட்டினாள் அக்ஷரா!
அவளிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் காட்டிய இடத்தில் நின்றிருந்தவர்களை எடைப் போடுவது போல உற்றுக் கவனித்தான் கணேஷ். பின், காரை கொஞ்சம் முன்னே செலுத்தி, தள்ளி நிறுத்தினான்! காரிலேயே இருந்த இரண்டு கேப்புகளை (cap) எடுத்து அகிலா, அக்ஷ்ரா பக்கமாக நீட்டினான்.
“அக்ஷ்ரா, அகிலா, உங்க சன் கிளாஸ் போட்டுக்கோங்க... இந்த கேப்பையும் (cap) போட்டுகோங்க... கார்ல tinted glass (கறுப்பு நிற கண்ணாடி) இல்லைனாலும் உங்களை அடையாளம் தெரியாது! என்ன நடந்தாலும் காரை விட்டு மட்டும் வெளியே வராதீங்க,” என்றான் கணேஷ் சீரியஸாக!
“கணேஷ்...”
“அக்ஷ்ரா, ஒரு பிரச்சனையும் வராது! அமைதியா இரு,” என்று அக்ஷ்ராவை தேற்றிய கணேஷ், கமலேஷிடம்,
“பாஸ், நீங்க டிரைவர் சீட்ல ரெடியா இருங்க! நான் என் கர்சீப்ல முகம் துடைக்குறது தான் நம்ம சிக்னல்! அப்படி நான் சிக்னல் கொடுத்த உடனே, காரை கிளப்பிட்டு யூ டர்ன் எடுத்து, ஸ்ட்ரெயிட்டா போயிட்டு, ரைட் திரும்பி, நெக்ஸ்ட் ரைட் எடுங்க... நாம கொஞ்சம் முன்னாடி க்ராஸ் செய்த பெரிய தண்ணி தொட்டி வரும். அதுக்கு பக்கத்துல வெயிட் செய்ங்க, நான் அங்கே வந்து ஏறிக்குறேன்,” என்றான்.
“சார், ப்ராப்ளம் ஆகிட போகுது...”
“யெஸ் பாஸ், ப்ராப்ளம் ஆக தான் போகுது! கார் கதவை லாக் செய்து வைங்க. நீங்களும் வெளியே வராதீங்க, இவங்களையும் வெளியே அனுப்பாதீங்க,” என்று இலகுவாக சொல்லி விட்டு, அகிலாவும், அக்ஷராவும் மறுப்பாக சொல்வதை கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய சிவப்பு நிற கேப்பை (cap) அணிந்துக் கொண்டே காரில் இருந்து இறங்கி நடந்தான் கணேஷ்.