“ரெடி செய்துட்டே இருக்கேன் ஆகாஷ் சார்...”
“குட்! எப்போடா அந்த ப்ளானை பார்ப்போம்னு நானும் ஆர்வத்தோட காத்துட்டே இருக்கேன்!!!!!”
அவன் சொன்னதில் இருந்த கேலி அவளுக்கு புரியாமல் இல்லை!
“இது எனக்கு ஒரு பெரிய சவால் தான் ஆகாஷ் சார்! ப்ராஜக்ட்டை சரியா செய்றது மட்டுமில்லை, நீங்க கேள்வியே கேட்க முடியாத மாதிரி கச்சிதமா செய்து முடிச்சு தரது எக்ஸ்ட்ரா சவால்!”
ஆகாஷின் முகத்தில் புன்னகை அரும்பியது!
“உங்களுடைய இந்த பாசிட்டிவ் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! நீங்க ரெடி செய்து தர போற பிளானும் அதே மாதிரி இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்...”
“கட்டாயம் சார்... என் ஆட்டிட்யூட்க்கு என்ன சார் குறைச்சல்! தனியா வளரும் போது அதுவும் தானா வந்திரும்!”
“தனியா வளர்ந்தீங்கன்னா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கைன்னு யாருமில்லையா?”
“மொத்தமாவே யாருமே இல்லை சார்! நான் வளர்ந்தது ஒரு அனாதை ஆசிரமத்துல...”
“ஓ! சாரி சினேகா! எனக்கு அதை பத்தி தெரியாது!”
“பரவாயில்லை சார்... இப்போ பார்க்க போற சைட் பத்தி சொல்லுங்களேன்... ஒரு ஆர்க்கிடெக்ட்டா என்ன எதிர்பார்க்குறீங்கன்னு சொல்லுங்க...”
முந்தைய பதிலை சொல்லும் போது சினேகாவின் முகம் இருண்டது என்றால், இப்போது அதற்கு ஈடுக்கட்டுவது போல அவளின் முகம்... குறிப்பாக கண்கள் ஆர்வத்தில் மின்னியது...