(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 28 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஹேமாவின் இந்த ‘அமைதி’ அப்ரோச், ரேஷ்மியையும் அமைதிப் படுத்தியது! கூடவே ஹேமா கேட்ட கேள்வி அவளுள் புது விதமான ரசாயன மாற்றத்தை உண்டாக்க, முகம் சிவக்க ஆம் என தலை அசைத்தாள் ரேஷ்மி.

   

ரேஷ்மியின் முகத்தில் தோன்றிய வெட்கம் + சிவப்பு & அமைதி ராகவியை வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு ஆச்சர்யப்படுத்தியது.

   

“வாட்ஸ் கோயிங் ஆன்? ரேஷூ என்ன பொண்ணு மாதிரி எல்லாம் பீகேவ் செய்ற?” எனக் கேட்டு கலாட்டா செய்தப்படி அண்ணனை பார்த்தாள்.

   

ஷ்யாம் விழிகளால் ரேஷ்மியை ஸ்கான் செய்துக் கொண்டிருந்தான். ‘அது சரி’ என நினைத்துக் கொண்ட ராகவி,

   

“மம்மி, இப்படி ஸ்லோ மோஷன்ல நீங்க க்வெஸ்டியன் எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க, இந்த லவ் பர்ட்ஸ் உங்களை ஓவரைட் செய்து பறந்திர போறாங்க. பெரியவங்களா லட்சணமா சுறுசுறுப்பா அடுத்த வேலையை ஸ்டார்ட் செய்ங்க,” என்றாள்.

   

ராகவி என்னவோ அண்ணனையும், வருங்கால அண்ணியையும் கிண்டல் செய்ய தான் சொன்னாள்.

   

ஆனால் தொடர்ந்து நடந்தவை வேகமாக தான் நடந்தன!

   

விஷயம் கேள்விப்பட்ட உடன் பூங்கோதைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவளுக்கு எப்போதுமே ஹேமாவிடம் தனிப்பட்ட பிரியம் உண்டு. எனவே ஹேமா வீட்டு சம்மந்தம் பூங்கோதைக்கு இனிக்கவே செய்தது.

   

விமலுக்கும், ஷ்யாம் ரேஷ்மி நடுவே படிப்பு மற்றும் துறை ஒற்றுமை பிடித்திருந்தது.

   

ராகுல் எப்போதுமே ஹேமாவின் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்பவன் தான். இப்போது ஷ்யாமுக்கும் விருப்பம் இருப்பது தெரியவும், அவனும் அந்த திருமணத்திற்கு உடனேயே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.