(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“ஆமா... ரேஷ்மிக்கு 23 வயசாக போகுதே! மேலே அமெரிக்கா போய் ரிசர்ச் செய்ய ஆசைப் படுறா. அவளை தனியா அனுப்ப மனசு வர மாட்டேங்குது. கல்யாணம் ஆகி அவங்க இரண்டு பேரும் ஜோடியா போனா நல்லா தானே இருக்கும்...”

   

“ம்ம்ம்ம்...”

   

கமல் மீண்டும் அவனுடைய பழைய ஒரு வார்த்தை பதிலுக்கு மாறி விட,

   

“அப்போ உங்களுக்கும் சம்மதமா? மேலே பேசலாமா?” என ஆர்வத்துடன் கேட்டாள் ரோஷனி.

   

“ம்ம்ம்ம்,” என்ற கமல், கிளம்பும் முன்,

   

“ரேஷ்மிக்கு அம்மாவா நீ செய்ற இத்தனை உதவிகளுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்னு எனக்கு தெரியலை... ரொம்ப நன்றிம்மா,” என்று சொல்லி விட்டு கையெடுத்து வணங்கியவன், ரோஷனி என்ன சொல்வது என்று புரியாமல் அதிர்ந்து நிற்கவும்,

   

“என்னை பார்க்க ரேஷ்மிக்கு பிடிக்காது அதனால நீயும் விமலுமே முன்னாடி நின்னு எல்லாம் செய்ங்க. நான் இருந்தாலும், இல்லைனாலும் அவளுக்கு அம்மா, அப்பா நீங்க தான்,” என்றான்.

   

ரோஷனி அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த போது கமல் அங்கே இல்லை! கிளம்பி சென்றிருந்தான்!

   

கமல் எனும் புதிர் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டதாக அவளுக்கு தோன்றியது!

   

✽✽✽

   

அதற்கு பின் எந்த தடையுமின்றி அனைத்தும் வேகமாக நடக்க, ரேஷ்மி – ஷ்யாமின் திருமணம் இனிதே நடைப்பெற்றது.

   

திருமண மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று மகளின் திருமணத்தை பார்த்த கமலின் கண்கள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.