Page 5 of 7
ஷ்யாம் பதில் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை கவனித்த ரேஷ்மிக்கு ‘பின்ச்’ வெட்கம் அதிகமாக தான் செய்தது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்த படி,
“ராகவி செம வாலுல ஷ்யாம்,” என்றாள்.
“சில்க்!”
“ம்ம்ம், என்ன???”
“என் தங்கை பத்தி ஆராய்ச்சி செய்ற நேரமா இது?”
“ம்ம்ம்??? உன் கிட்ட வேற எதை பத்தி பேசுறது?”
“நம்மளை பத்தி பேசு சில்க்!”
“அதென்ன இப்படி ஒரு நிக் நேம் வச்சிருக்கீங்க, சில்க்ன்னு???”
“ஹேய் உனக்கு நிஜமா தெரியாதா?”
“ஹுஹும்!!!”
ஜிமிக்கி அசைய எழிலாக தலையை ஆட்டினாள் ரேஷ்மி.
“பாருடா, என் சில்க் பேபிக்கு தெரியாத விஷயம் கூட உலகத்துல இருக்கு!”
“ஷ்யாம்!!!!”