(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

நிறைந்தன.

   

“சுமி, பார்த்தீயா, நம்ம குட்டி பாப்பா வளர்ந்துட்டா! ஷ்யாம் அவளை நல்ல படியா பார்த்துப்பான்.”

   

யாருக்கும் கேட்காத, கேட்டாலும் புரியாத மிகவும் மெல்லியக் குரலில் வாய் விட்டே சொன்னவன், ஏதோ பதிலை எதிர்பார்ப்பவனை போல அவனின் அருகே காலியாக இருந்த இடத்தைப் பார்த்தான்!

   

✽✽✽

   

ரேஷ்மியும், ஷ்யாமும் அவர்களின் ‘ஸ்பெஷல் டே’வின் சந்தோஷ சாரலில் மூழ்கி இருந்தார்கள்.

   

மனதிற்கு பிடித்த துணையுடன் திருமணம், அதுவும் பெற்றவர்களின் முழு சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் எனும் போது அவர்களின் மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி இருந்ததில் அதிசயம் இல்லை.

   

ராகவியின் தலைமையில் அபிலாஷ், சுகன்யா என இரண்டு குடும்பத்தின் இளம் தலைமுறையினர் டீமாக மணமக்களை கிண்டல் செய்து டைம் பாஸ் செய்துக் கொண்டிருந்தனர்.

   

நேரம் நகர்ந்து செல்ல, மணமக்கள் இருவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த தனிமை ஓருவழியாக அவர்களுக்கு கிடைத்தது.

   

ரேஷ்மியின் அறை தான் அலங்கரிக்கப் பட்டு இருந்தது!

   

அறையை சுற்றி பார்த்த ரேஷ்மி,

   

“என் ரூமை அடையாளமே தெரியாத மாதிரி மாத்திட்டாங்க. நல்லா தான் வேலை செய்திருக்காங்க,” என்றாள் மெச்சுதலாக!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.