(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“கோவிச்சுக்காத பேபி. இந்த நிக் நேமுக்கு உன் அம்மா, அப்பாக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். ரேஷ்மினா சில்கின்னு அர்த்தம்”

   

“ஓ! அப்படியா?” 

   

ரேஷ்மி எழிலாக ஆச்சர்யப் பட்ட விதத்தில் மனம் தடுமாற, அவளை தன்னுடன் இறுக அணைத்து முத்தமிட குனிந்தான் ஷ்யாம்.

   

வெகு இயல்பாக அவனின் முகத்தை கைகளால் தடுத்து நிறுத்திய ரேஷ்மி, அவனை பார்த்து முறைத்தாள்.

   

“என்ன சில்க்? ஏன்?”

   

ஷ்யாம் புரியாமல் கேட்க, அவள் உதடுகளை சுழித்தாள்.

   

“இதுல எல்லாம் மட்டும் உனக்கு இவ்வளவு அவசரம்!!! நான் ஒருத்தி கல்யாண பேச்சை எடுத்து கொடுத்தா நீ அன்னைக்கு அப்படி திரு திருன்னு முழிக்குற???”

   

“சில்க், என்ன நீ? என்னை பத்தி உனக்கு தெரியாதா? நீ பாட்டுக்கு திடீர்னு அப்படி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா நான் வேற என்ன செய்வேன்? அதும் அம்மா கிட்டேயே நேரா வேற  சொல்ற!!!!”

   

“ஹையோ, அம்மாவை பார்த்து பயப்படுற டாக்டரை இப்போ தான் பார்க்குறேன்.”

   

“ஹ்ம்ம்ம்.... உனக்கு தான் இது புதுசு! எனக்கு பழசு! எங்கப்பாவும் டாகடர் தானே, எங்க அம்மா சொல்றதை என்ன எதுன்னு கேட்காம அப்படியே செய்வார். அவ்வளோ பயம்!”

   

“அது பயமில்லை மக்கு பையா, அன்பு, காதல், நம்பிக்கை!”

   

“எனக்கு எப்படி அதெல்லாம் தெரியும், இனிமேல் நீ தான் சொல்லி கொடுக்கனும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.