பச்சைக் கொடி காட்டினான்.
அனைவரும் சம்மந்தம் சொல்லி விட கமலிடம் பேசும் பொறுப்பு எப்போதும் போல ரோஷனியிடன் வந்து சேர்ந்தது.
காலை நேரத்தில், எப்போதும் போல மற்றவர்களுக்கு முன்பே ஆஃபீஸ் செல்ல கிளம்பி வந்த கமலிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் ரோஷனி.
“ரேஷ்மி கல்யாணம் பத்தி உங்க கிட்ட பேசனும்... ஹேமா இருக்காங்களே... அவங்க மகன் ஷ்யாமுக்கு ரேஷ்மிய கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுறாங்க...”
ரேஷ்மி கல்யாணம் என்று அவள் சொன்னதும் கமல் முகத்தில் ஏற்பட்ட திகைப்பிற்கான காரணம் ரோஷனிக்கு புதிராக இருந்தது.
ஆனால் அதை பற்றி கேள்வி கேட்டு கொண்டிருக்காமல்,
“ஷ்யாமுக்கு ரேஷ்மியை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்... அவன் அப்பாவும் சம்மதம் சொல்லிட்டார்... இங்கே ரேஷ்மி, அத்தை, உங்க தம்பி எல்லோருக்கும் சம்மதம் தான்... நீங்க சொன்னா மேலே பேசலாம்,” என்றாள்.
“ரேஷ்மிக்கு கல்யாணம் ஆகுற வயசாயிடுச்சாம்மா??”
பொதுவாக ம்ம்ம், சரி, இல்லை என்று ஒரு வார்த்தையிலோ, அல்லது தலை அசைப்பிலோ பதில் சொல்லும் கமல், பல வருடங்கள் கழித்து நான்கு வார்த்தைகள் கொண்ட கேள்வி ஒன்றை கேட்கவும் ரோஷனிக்கு அதிசயமாக தான் இருந்தது.
ஆனால் அவளுக்குமே ரேஷ்மி திடீரென கல்யாணம் பற்றி பேசிய போது, இதே கேள்வி தானே வந்தது!
எனவே புரிந்துக் கொண்டவளாக,