(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 43 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

மா தினமும் பேப்பர்ல தில்லையை பிடிக்கறோம்னு செய்திதான் வருதே தவிர பிடிச்ச பாடில்லை” என திட்டிக் கொண்டே வெறுப்புடன் அடுத்த செய்தித்தாளை பிரித்துப் படித்தாள். 

   

அதில் கருணாகரனை பிடித்த செய்தி கூட அதில் இடம்பெற்றிருந்தது, போலீசே தேடி பிடித்து கருணாகரனை கைது செய்ததாகவும், கருணாவை காப்பாற்ற வந்த அவனது தம்பி கஜாவையும் போலீசே கைது செய்ததாகவும் எழுதி இருந்தது, இந்த இருவரையும் பல நாளாக தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ் அதிகாரிக்கு மக்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர் என இருந்தது. இதில் ஒரு இடத்தில் கூட தில்லையை பற்றின பேச்சே இல்லை அவனது பெயர்கூட இல்லை, அதைப் படித்து வியந்தாள் சம்யுக்தா

   

”இந்த சிவா ரொம்ப சுயநலவாதி, தில்லையை வைச்சி அவனோட எதிரியை பிடிச்சி பெயர் சம்பாதிச்சிக்கிட்டானே, இதுல இவனுக்கு பாராட்டு மழை வேறயா சே இவன்லாம் ஒரு போலீசு, போலீஸ் துறைக்கே இவன் ஒரு களங்கம்” என கோபமாக திட்டிக் கொண்டிருந்தாள், அந்நேரம் வீட்டிற்குள் வந்த தில்லையோ சம்யுக்தாவின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான் அதைப் பார்த்த சம்யுக்தா

   

”என்ன சிரிப்பு, நான் உங்க நண்பனைத்தான் திட்டறேன்”

   

”தெரியுது எவ்ளோ வேணும்னாலும் திட்டிக்க, எனக்குப் பிரச்சனையில்லை ஆமா என்னை பத்தி ஏதாவது விசயம் சொல்லுதா நியூஸ்பேப்பர்”

   

”உன்னையா காரி துப்புது போதுமா”

   

”ஓஹோ அப்படியா சரி சரி விடு விடு”

   

“உனக்கு ரோஷமே இல்லையா”

   

”இல்லையே”

   

”மானம் அவமானம் பத்தியெல்லாம் யோசிக்க மாட்டியா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.