“மாட்டேன்”
”கடவுள் மேலயாவது பயம் இருக்கா”
“எனக்கு நான்தான் கடவுளே போதுமா”
”உன்னை திருத்தவே முடியாது, எக்கேடு கெட்டுப் போ” என சொல்ல அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
”ஆமா வந்தப்ப 100 சவரன் நகையோட வந்தியே அது எங்க காணலை”
”உன் மேல நம்பிக்கையில்லை, அதனால அதையெல்லாம் பத்திரமா கழட்டி ஒளிச்சி வைச்சிருக்கேன்”
”எங்க இருக்கு இந்த வீட்லயா ஒளிச்சி வைச்சிருக்க”
”ஆமாம் ஏன் கேட்கற“
”கைசெலவுக்கு பணம் இல்லைன்னா அதை வித்துடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள ஒளிச்சி வைச்சிட்டியே”
“அடப்பாவி என் நகையில கையை வைச்ச உன் கையை வெட்டிடுவேன்”
”சரிவிடு இந்த வீட்லதானே ஒளிச்சி வைச்சிருக்க, தேடி எடுத்துக்கறேன்”
”கொன்னுடுவேன் உனக்கெதுக்கு பணம் தேவைப்படுது”
”குடும்ப பொண்ணு மாதிரியா பேசற, வெட்டுவேன்ங்கற கொன்னுடுவேன்ங்கற”