”நான் எதுவும் நினைக்கலை சீக்கிரமா போய் வேலையை முடிச்சிட்டு வந்து சேரு நான் வரலை” என்றாள் கோபமாக, அவள் கோபமாக சொன்னாலும் அவனுக்கு அது பிடித்திருந்தது.
”இப்படிதான் ஒவ்வொரு வீட்லயும் வழியனுப்பி வைப்பாங்க என்ன மத்தவங்க வீட்ல பாசமா நடந்துக்குவாங்க, இந்த வீட்ல பாசம் இல்லை ஆனாலும் பரவாயில்லை ஏதோ போய் வான்னு சொல்றதுக்கு நீயாவது இருக்கியே சந்தோஷம்” என சொல்லிவிட்டு கிளம்புவதற்குள் அவனது அடியாட்கள் வந்தார்கள்
”அண்ணா என்ன இன்னுமா ரெடியாகற, சிக்கிரமா வாண்ணா”
”ஏன்டா குதிக்கறீங்க”
”அவன் கடல் கடந்து போயிடப் போறான் வாண்ணா”
“இருடா போலீஸ்கே அக்கறையில்லை, அவனை பிடிக்காம விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கறானுங்க உங்களுக்கென்னடா இவ்ளோ அக்கறை”
”அவனை விட்டா போலீஸ்க்கு பிரச்சனையில்லை, உனக்குதான் பிரச்சனை, அவன் உன்னை கொன்னுடப் போறான் வாண்ணா சீக்கிரம்”
“இருடா சொல்லிட்டு வரேன்“
”இது வேறயா நீ சொல்லி முடிக்கவே நேரமாகும், இரு நானே சொல்லிடறேன்” என சொல்லியவன் சம்யுக்தாவிடம்
”தப்பா நினைக்காதீங்க, பக்கத்தில ஒரு நிகழ்ச்சி நடக்குது அதான் கோயில்ல நடக்குமே நாட்டியாஞ்சலி அது நடக்குது, அண்ணாவை நாங்க கூட்டிட்டு போறோம் நீங்க இங்கயே இருங்க” என சொன்னதும் அவளுக்கு ஆசையாக இருந்தது
”நாட்டியாஞ்சலியா அப்படின்னா நானும் வருவேன்” என்றாள். அதைக் கேட்டு தில்லை நொந்துக்