தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 10 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
ரோஹினி பாசத்திற்காக, அம்மாவின் அரவணைப்பிற்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் என்ற எண்ணம் மனதில் ஓட,
“சரி, அந்த பேச்சு வேண்டாம்... அதை விடுடா ரோஹினி,” என்றாள் சாரதா பரிவுடன்!
“ப்ச்... ஏன்டா இப்படி இளவரசியா பிறந்தேன்னு நான் நினைக்காத நாள் ரொம்ப குறைவு... ஏதாவது ஒரு ஏழைக் குடும்பத்துல பிறந்திருக்க மாட்டேனான்னு எத்தனையோ நாள் நினைச்சிருக்கேன்,” என்றாள் ரோஹினி அதே சோகம் இழையோட!
அவளை அப்படியே வருத்தத்தில் விட்டு வைப்பது சரி இல்லை என்று தோன்ற, “தப்புடா ரோஹினி!!! எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கு! இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்றதுப் போல, நமக்கு அடுத்தவங்க வாழ்க்கை மாதிரி இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது... அவங்களுக்கு என்ன எல்லாம் பிரச்சனை இருக்கோ, என்னவோ... உன் வாழ்க்கை மாதிரி கிடைக்காதான்னு ஏங்குறவங்க ஆயிரம் பேர் இருப்பாங்க,” என சாரதா ரோஹினியை தேற்ற சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அம்மா, அண்ணாவும் வந்தாச்சு...! அவனுக்கும் சேர்த்து டீ போடுங்க,” என்ற விஜயின் குரல் உள்ளிருந்து உரக்க ஒலித்தது!
“பெரியவன் வந்துட்டான்... இனி நாம இங்கேருந்து ஒரு யூஸும் இல்லை... நாமளும் அங்கேயே போகலாம் வா,” என்று ரோஹினியை அழைத்தாள் சாரதா.
அஜயை எதிர்கொள்ள ரோஹினிக்கு தயக்கமாக இருக்கவே,
“அவங்க ரெண்டுப் பேருக்கும் தனிமை வேணும்னு சொன்னீங்களே, அவரும் நம்மளை மாதிரி அங்கே இருந்து போக மாட்டாரா??” என்றாள்!
சாரதாவிற்கு சிரிப்பு வந்தது! “அஜய பார்க்க எதுக்கு இவ்வளவு யோசிக்குற! கொஞ்சம் முன்னாடி கிச்சன்ல பாத்திரம் உருண்ட சத்தம் எவ்வளவு பெருசா கேட்டுச்சு! அப்போ என்ன ஏதுன்னு கூட கேட்காம அசையாம இருந்த விஜய், இப்போ கூப்பிடுறான்னா, நம்மளை அங்கே வாங்கன்னு