அப்படியே, இரவு உணவு வேளை முடிந்து தூங்கும் நேரமும் வந்தது.
மகன்கள் இருவருக்கும் ‘குட் நைட்’ சொல்லி விட்டு ரோஹினியை தேடி வந்தாள் சாரதா.
“ரோஹினிம்மா தூங்குடா... நான் பக்கத்து ரூமுல தான் இருப்பேன்... ஏதாவது வேணும்னா குரல் கொடு... இந்த சீலிங் ஃபேன்லேயே நல்லா காத்து வரும்... இருந்தாலும் டேபிள் ஃபேனும் வச்சிருக்கேன்... குட் நைட்...”
ரோஹினி பதில் எதுவும் சொல்லாது பாவமாக விழித்தாள்!
“என்னடா???” என புரியாமல் வினவினாள் சாரதா!
“நான் மட்டும் இங்கே தனியா தூங்கனுமா??? பயமாருக்கு...”
“பயமா??? என்ன பயம்??? நான் பக்கத்திலேயே இருக்கேன்... வீட்டுல சிங்கக்குட்டி மாதிரி இரண்டு பசங்க இருக்காங்க... அப்புறம் என்ன???”
“ஏன்னு தெரியலை... ஆனா, பயமா இருக்கு...”
சாரதா யோசித்தாள்...
அந்த அறையில் இருக்கும் கட்டில் சிறியது... அதில் இரண்டுப் பேர் தூங்குவது ரொம்பவே கடினம்...
ரோஹினியை தரையில் படுக்க சொல்ல முடியாது... சாரதாவும் தரையில் படுத்து பலப் பல வருடங்கள் ஆகி விட்டது...
கஷ்டமாக இருக்குமோ???? முதுகு வலிக்குமோ???
யோசனையுடன் ரோஹினியைப் பார்த்தாள் சாரதா...