தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 11 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
வழக்கம் போல, சாரதா நிலைமையை சமாளிக்க முயன்றாள்.
“ரோஹினிக்கு இது புது இடம் அஜய்... தனியா தூங்கப் பயப்படுறா...”
“அப்போ நீங்க கட்டில்ல படுங்க... அவக் கீழே படுக்கட்டும்,” என்றான் அஜய் ரோஹினியை பார்த்து முறைத்துக் கொண்டே!
“அவ சொன்னா அஜய்... ஆனா, அந்த கட்டில் மெத்தை ரொம்ப ஹார்டா இருக்கும்... எனக்கு சரியா வராது... அதான் நான் அவளை அங்கே படுத்துக்க சொன்னேன்...”
“நான் வேணா உங்க ரூம்ல இருக்க கட்டிலை இழுத்துப் போட்டு தரட்டுமாம்மா?”
“அதெல்லாம் இப்போ வேண்டாம்ப்பா... இன்னைக்கு ஒரு நாள் தானே... நான் அட்ஜஸ்ட் செய்துக்குறேன்.... நீ போய் தூங்கு... காலைல ஆஃபிஸுக்கு டைம்க்கு கிளம்பனுமே...”
ரோஹினியை மீண்டும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு, சாரதாவிற்கு மட்டும் குட் நைட் சொல்லிவிட்டு சென்றான் அஜய்!
“நீ தூங்குடா ரோஹினி,” என்றாள் சாரதா!
“எனக்கு எதுவுமே தெரியலை,” என்றாள் ரோஹினி அவள் ஸ்டைலில் மொட்டையாக!
“என்ன தெரியலை??”
“நீங்க எனக்காக இங்கே தூங்க வந்தீங்க... ஆனால் நான் உங்களை கட்டில்ல படுக்குறீங்களான்னு கேட்க கூட செய்யலை!”
“அதெல்லாம் ஒன்னுமில்லடா... நீ தூங்கு...”
கட்டிலில் படுத்த ரோஹினி, நின்றுக் கொண்டிருந்த சாரதாவை பார்ப்பது போல அந்த பக்கமாக