(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)


கருவிலே உன்னை ஏந்துமே 
ஒரு முறை தலை குனி 
உன் வெற்றி சிங்கம் முகம் அவன் 
பார்ப்பதற்கு மட்டுமே

   

பாடலை கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

   

முக பாவனைகளை மாற்றியபடி சாரதா அந்த பாடல் வரிகளை பாடுவதை சத்தம் போடாமல் நின்று ரசித்தாள் ரோஹினி.

   

மேடையை சுத்தம் செய்து முடித்து விட்டு, பெருக்கலாம் என துடைப்பத்தை எடுக்க திரும்பிய சாரதா, ரோஹினி நிற்பதைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

   

“உன்னை கவனிக்கலை ரோஹினிம்மா... என் பாட்டை கேட்டு பயந்துட்டீயா???”

   

“இல்லை! நீங்க இவ்வளவு அருமையா பாடுவீங்களான்னு ஆச்சர்யப் பட்டுட்டு இருக்கேன்!“

   

“சும்மா தானே சொல்ற? இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்... இங்கே வா நீ... திரும்ப எதுக்கு இந்த கொண்டை எல்லாம்??? இங்கே இருக்குற வரைக்கும் இந்த மாதிரி கொண்டைக்கு எல்லாம் பெரிய நோ! குளிச்சுட்டு என் கிட்ட வா. நான் உனக்கு புது, புது ஸ்டைல்ல தலை வாரி விடுறேன்...”

   

ரோஹினி மறுப்பு எதுவும் சொல்லாமல் சாரதா பக்கத்தில் சென்றாள்.

   

மென்மையாக அவள் கொண்டையாக்கி போட்டிருந்த முடியை விடுதலை செய்த சாரதா,

   

“பசிக்குதாடா?? சாப்பிட்டுட்டு கூட தலை வாரலாம்,” என்றாள்.

   

“தலை முடியை இப்படி பிரிச்சு போட்டுட்டு சாப்பிடலாமா???”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.