(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

“பரவாயில்லை... உங்களுக்கும் தானே பழக்கம் இல்லை,” என்றபடி ரோஹினி பாயிலேயே படுத்துக் கொள்ளவும், சாரதா அதற்கு மேல் அவளை தடுக்க முயற்சிக்கவில்லை.

   

எப்படியோ முயற்சி செய்து, மெல்ல சாரதா தூக்கத்தில் ஆழ்ந்தப் போது, ரோஹினியின் கரம் அவள் மேல் படர்ந்தது...

   

தானாக ஒரு புன்னகை தோன்ற அப்படியே தூங்கிப் போனாள் சாரதா!

   

✽✽✽

   

காலையில் ரோஹினி கண் விழித்தப் போது, சாரதா அவள் பக்கத்தில் இல்லை. அவள் படுத்திருந்த இடத்தில் ஒரு தலையணை தான் இருந்தது.

   

ரோஹினியின் தூக்கத்தை கலைக்காமல் இருக்க, சாரதா ரோஹினியின் கையை அந்த தலையணையில் எடுத்து வைத்து விட்டு சென்றிருப்பது ரோஹினிக்குப் புரிந்தது.

   

பார்த்து முழுதாக ஒரு நாள் கூட ஆகி இருக்காத சாரதாவின் மீதான பாசம் ரோஹினியின் மனதில் இன்னும் அதிகமானது!

   

எதேச்சையாக அங்கிருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தவள் திகைத்துப் போனாள்.

   

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது!!!!

   

அவசர அவசரமாக எழுந்து, வேகமாக குளித்து, உடை மாற்றி சாரதாவை தேடிச் சென்றாள்.

   

அங்கே சாரதா சமையலறை மேடையை சுத்தம் செய்தப் படி ரேடியோவில் பாடிக் கொண்டிருந்த,

   

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே 
ஆண் இனமே உன்னை வணங்குமே 
நன்றிக்கடன் தீர்பதற்க்கே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.