ரோஹினி இப்போதும் திரு திரு என விழித்தப் படி நின்றிருந்தாள்... சாரதாவிற்கு அவளை பார்க்க சிறுக் குழந்தைப் போல இருந்தது...
அட்ஜஸ்ட் செய்து தூங்கு, என்று சொல்ல மனம் வராமல்,
“சரிடா, நான் இப்படி பாய் போட்டு இங்கேயே படுத்துக்குறேன்,” என்றாள்.
ரோஹினியின் முகம் சட்டென மலர்ந்தது.
“நன்றி... ரொம்ப நன்றி,” என்றாள் குரலிலும் உற்சாகம் பொங்க!
“நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம்... நல்லா தூங்கு... எனக்கு அதுவே போதும்!”
பாயை தேடி எடுத்து... தூசி தட்டி... விரித்து... மேலே பெட்ஷீட், தலையணை எல்லாம் போட்டு சாரதா தூங்க தயாரானப் போது,
“அம்மா,” என்று அழைத்த அஜயின் குரல் கேட்டது.
“இந்த லாஸ்ட் ரூம்ல இருக்கேன்டா... இங்கே வா,” என அவனுக்கு பதில் சொன்னாள் சாரதா.
“அம்மா, எனக்கு நாளைக்கு லஞ்ச் வேண்டாம்... என் ஃப்ரென்ட் வில்சனுக்கு நாளைக்கு பர்த்டே... ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்,” என்று பேசிக் கொண்டே போன அஜய், தரையில் இருந்த பாயை பார்த்து விட்டு, அந்த அறையில் இருந்த கட்டிலையும் பார்த்தான்...
ரோஹினி அப்போதும் கட்டிலின் அருகே தான் நின்றுக் கொண்டிருந்தாள்...
“அம்மா! எதுக்கு இங்கே பாய் போட்டு இருக்கீங்க??? நீங்க எங்கே தூங்கப் போறீங்க???”
அந்த கேள்விகளை கேட்டப் போது அஜயின் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது!!!!