(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

இன்டைரக்ட்டா சொல்றான்னு அர்த்தம்!”

   

“ஓ,” என ரோஹினி ஆச்சர்யப்படவும்,

   

“எங்க வீட்டுல அப்படி தான் ரோஹினிம்மா, நிறைய கோட் லேங்க்வேஜ் வச்சிருப்போம்! நீயும் கொஞ்ச நாள்ல இதெல்லாம் கத்துப்ப... வா, நாம பெரியவனுக்கும் டீ போட்டு எடுத்துட்டு போகலாம்,” என சொல்லி சாரதா எழுந்துக் கொள்ள, ரோஹினியும் இப்போது எந்த கேள்வியும் கேட்காமல் தொடர்ந்தாள்!

   

✽✽✽

   

தம்பியுடனும், நிரஞ்சனாவுடனும் கதைப் பேசிக் கொண்டிருந்த அஜய், சாரதா டீக் கோப்பைகளுடன் வரவும், அதில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டே,

   

“எப்படிம்மா போச்சு உங்களுக்கு இன்னைக்கு டைம்???” என்றான்.

   

“எனக்கென்ன, ரோஹினி இருக்குறதால நேரம் போனதே தெரியலை...” என்றாள் சாரதா.

   

“ஓ, அந்த ங்க பொண்ணா...! அவளும், அவளு...” பேசிக் கொண்டே இருந்த அஜய் அப்போது தான் உள்ளறையில் இருந்து வெளியே வந்த ரோஹினியை பார்த்தான்... பார்த்தவன், ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான்!!!

   

ரோஹினி முன்னே எடுத்து விட்டிருந்த லூசாக பின்னிய கூந்தல் காற்றில் அழகாக அசைய... 

   

தலையில் வைத்திருந்த மல்லிச்சரம் கழுத்தின் இரு பக்கமும் சாமரம் வீச....

   

மதியம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொண்டையுடன் பார்த்த அதே ‘ங்க பொண்ணா’ இவள்!!!!????

  

அஜயால் நம்பவே முடியவில்லை! கண் இமைக்காமல் ரோஹினியையே பார்த்துக் கொண்டிருந்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.