(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”உன்கூட சேர்ந்தா நான் மட்டும் எப்படியிருப்பேனாம்”

   

”அதுவும் சரிதான், ஆம்பளைன்னா ஆயிரம் இருக்கும், அங்க இங்கன்னு போவேன் வருவேன், கையில பணம் இல்லைன்னா எப்படியாம், அதனால நகையை பத்தி கேட்டேன் தரலைன்னா போயேன், எனக்கென்ன பணம் வர்ற 100 வழியிருக்கு”

   

”இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை”

   

”ஆமா தாலி எங்க, கையில இல்லை”

   

”முந்தானையில பத்திரமா முடிஞ்சி வைச்சிருக்கேன், எதுக்கு கேட்கற அதையும் விக்கலாம்னா, தோலை உரிச்சிடுவேன்”

   

”சரி விடு எதுக்கு கோச்சிக்கற உன் தாலி எனக்கு வேணாம், அப்பறம் ஒரு விசயம் சொல்ல வந்தேன்” என இழுக்க

   

“என்ன” என்றாள் அதிகாரமாக

   

”ரொம்ப நாளா ஒருத்தனை கொல்றதுக்கு தேடிக்கிட்டு இருந்தேன், இன்னிக்குத்தான் அவன் இருக்கற இடம் தெரிஞ்சது வசமா மாட்டினான். இன்னிக்கு அவனை விட்டா அவன் கடல் கடந்து வேற நாட்டுக்குப் போயிடுவான், அவன் போறதுக்குள்ள அவனை நான் பிடிக்கனும் அதனால நான் வெளிய போறேன் நீயும் வர்றியா”

   

”வரேன்”

   

”அதானே என்னடா 2 நாளா அமைதியா இருந்தியேன்னு பார்த்து சந்தோஷப்பட்டேன், கூப்பிட்டதே தப்புங்கற மாதிரி ஆயிடுச்சி, இதப்பாரு நீ வர வேணாம் நான் மட்டும் போயிட்டு வந்துடறேன், வர்றதுக்கு கொஞ்ச நேரமாகும், அதுக்குள்ள உனக்கு நியாயம் வழங்காம நான் ஓடிட்டதா நினைச்சிடாத சரியா, கண்டிப்பா நான் வருவேன்.”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.