(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

அவன் தவறு செய்யவில்லை என சொல்வதை போல தட்டிக் கொடுத்த கடைக்காரரிடம் பர்ஸில் இருந்து பணத்தை கொடுத்து விட்டு எதுவோ சொல்லி விட்டு, தன் கர்சீப்பில் முகத்தை துடைத்து விட்டு காருக்கு எதிர் திசையில் கூலாக நடக்க தொடங்கினான்!

   

சிக்னல் கிடைத்தது புரிந்து விட, காரை ஸ்டார்ட் செய்தான் கமலேஷ். நடந்தது புரிந்து, அவன் முகத்தில் இப்போது சின்னதாக ஒரு புன்னகை தோன்றி இருந்தது!

   

அக்ஷ்ரா கண் முன் நடந்ததை முழுவதுமாக நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துப் போய் இருந்தாள்! கணேஷ் மீது கோபம் வரவில்லை... அவன் அவளுக்காக தான் செய்தான் என்பது புரிந்தது... ஆனால் எதற்கு இவ்வளவு பெரிய ரிஸ்க்?

   

✽✽✽

   

தனக்கு வந்திருந்த ஈ-மெயில் ஒன்றை படித்த ஆகாஷ், கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு, பிரபாகரை இன்டர்காமில் அழைத்தான்.

   

“பிரபா, செங்கல்பெட் தாண்டி ஒரு வேர்ஹவுஸ் (warehouse) கட்ட சைட் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நான் அந்த சைட் விசிட் செய்ய போறேன். நீங்களும் வரீங்களா? எனக்கு ஒரு ஐடியா வேணும்...”

   

“ஆகாஷ், இன்னைக்கு ஈவ்னிங் தொடங்குற எம்ப்ளாய்மென்ட் எக்ஸிபிஷனுக்கு நம்ம கம்பெனி சார்பா நான் தான் போக போறேன்... லாஸ்ட் வீக் கூட இதை பத்தி பேசினோம்...”

   

“ஓ! ரைட் ரைட்! நான் தான் மறந்துட்டேன்! ஒரு சிவில் எஞ்சினியர் வந்தா எனக்கு உதவியா இருக்கும்னு நினைச்சேன். இட்ஸ் ஓகே பிரபா, நான் மேனேஜ் செய்துக்குறேன்...”

   

“சிவில்னா, சினேகா இருக்காங்க ஆகாஷ்... அந்த கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ் கம்பெனில இருந்து வந்திருக்க பொண்ணு... நல்ல திறமையான பொண்ணா தெரியுறாங்க! உங்களுக்கு சரியான ஹெல்ப்பா இருக்கும் ஆகாஷ்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.