பிரபாகர் சினேகாவை சிபாரிசு செய்தது ஆகாஷிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதை குரலில் வெளிபடுத்தாமல்,
“டாக் டூ ஹெர் பிரபா! என்னோட சைட் விசிட் வரதை கம்ஃபார்டபிலா ஃபீல் செய்தா வர சொல்லுங்க. எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்,” என்றான்.
✽✽✽
அரை மணி நேரம் கழித்து அந்த அலுவலக கட்டிட வளாகத்தில் இருந்து வெளியே கிளம்பியது ஆகாஷின் கார்.
ஆடம்பர வகை கார் என்பதால் அதில் பயணம் செய்வது சினேகாவிற்கு புது அனுபவமாக இருந்தது!
கார் நகர்வதே தெரியவில்லை! அத்தனை வசதியாக இருந்தது...
அந்த புதிய அனுபவத்தை ரசித்தப் படி அவள் அமைதியாக இருக்க,
“ப்ளான் ரெடி செய்திட்டீங்களா?” என்று அவளை பார்த்துக் கேட்டான் ஆகாஷ்!
இவ்வளவு நாளாக அவள் கவனிக்காமல் இருந்த ஒரு விஷயம் சினேகாவிற்கு இப்போது புலப்பட்டது!
ஆகாஷ் அவளிடம் எப்போதுமே ‘ங்க’வுடன் தான் பேசினான்... அவன் என்று இல்லை அவனின் அலுவலகத்தில் இருப்பவர்களும் கூட அப்படி தான் அவளிடம் பேசினார்கள்.
மனதிற்குள் இந்த யோசனை ஓடினாலும், உடனேயே ஆகாஷிற்கு பதில் சொல்லவும் அவள் தவறவில்லை.