(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

“சாரதாக்கா நான் தான் கலா. இளவரசி எழுந்தாச்சா?”

   

“ம்ம்ம்.. ரோஹினி இங்கே தான் இருக்கா... அவக் கிட்ட ஃபோனைக் கொடுக்குறேன் பேசு...”

   

சாரதாவிடம் இருந்து ஃபோனை வாங்கிய ரோஹினி,

   

“கலாம்மா,” என்றாள் மிகவும் மென்மையான, அமைதியான ஆனால் கம்பீரமான குரலில்.

   

சாரதவிற்கு ஆச்சர்யமாக இருந்தது!

   

சற்று முன் அவளிடம் ரோஹினி பேசியதற்கும், இப்போது கலாவிடம் பேசுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது!

   

அதைப் பற்றி யோசித்தப்படி, பாதியில் விட்டு வந்திருந்த சமையலறையை பெருக்கும் வேலையை தொடர்ந்தாள் சாரதா.

   

தோராயமாக பதினைந்து நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவள் முன் வந்து நின்றாள் ரோஹினி.

   

“கலா என்ன சொன்னா???” என சாரதா விசாரிக்க,

   

“என்னால அங்கே எல்லோரும் கவலையா இருக்காங்களாம். ரொம்ப தேடுறாங்கன்னு சொன்னாங்க,” என்றாள் ரோஹினி சோர்வாக!

   

“விடுடா எல்லாம் நல்லதுக்கு தான்... கொஞ்ச நாள்ல உனக்கு பிடிக்காத கல்யாணத்தை நிறுத்திடுறோம்ன்னு சொல்லிடுவாங்க... நீ கவலைப் படாதே...”

   

“என்னால எல்லோருக்கும் வருத்தம்...”

   

“அப்படி பார்த்தா அவங்க எல்லோரும் உனக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்துக்க சொல்லி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.