(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

உன்னை கட்டாயப் படுத்த தானே செஞ்சாங்க! அது மட்டும் சரியா என்ன?”

   

ரோஹினி யோசனையுடன் மௌனமாக நின்றாள்!

   

“ஆமா, அப்படி யாரை கல்யாணம் செய்துக்க சொல்லி எல்லோரும் அவ்வளவு கட்டாயப் படுத்தினாங்க???”

   

“எங்க தீவோட தளபதி விக்ரம்... விக்கிரமாதித்தனை!”

   

“அட! இந்த விக்ரமாதித்தனை வேதாளத்தை போய் பிடிக்க போக சொல்லாம, உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லிட்டாங்களா...??? ஹா ஹா...”

   

சாரதாவின் சிரிப்பின் எதிரொலியாக ரோஹினியின் முகத்திலும் மீண்டும் புன்னகை தோன்றியது.

   

“என்னை பார்த்தா உங்களுக்கு வேதாளம் மாதிரி இருக்கா???”

   

“நேத்தைக்கு ஏர்போர்ட்ல பார்த்தப்போ கொஞ்சம் அப்படி இருந்துச்சு! ஆனா, இப்போ தேவதை மாதிரி இருக்க! சரி, வா நாம டிவி பார்ப்போம்...”

   

“நேத்தைக்கு வந்த அந்த சிரிப்பு நிகழ்ச்சி வருமா?”

   

“ஏன் நேத்தைக்கு அதைக் கேட்டு அழுதது போதாதா உனக்கு??”

   

“இல்ல... நேத்து நிகழ்ச்சில கேட்ட கேள்விக்கு பதில் என்னன்னு நான் கேட்கவே இல்லை...”

   

“அப்படி என்ன கேள்வி கேட்டா அந்த அனு???”

   

“ஒரு ஆங்கிலம் தெரிஞ்ச மாடு திரை அரங்கத்துக்கு போனது... அங்கே திடீர் என்று அரங்கத்தின் கதவை கடிக்க ஆரம்பித்தது... ஏன்???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.