(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

சாரதா வாயைப் பிளந்து ரோஹினியை பார்த்தாள்!

   

“அனு பேசின தமிழ்ல இருந்து நீ ட்ரான்ஸ்லேட் செஞ்சு வேற தமிழ்ல சொல்ற மாதிரில இருக்கு!!!! ஹா ஹா ஹா...! சரி, உன் ஜோக்குக்கு வருவோம்... அது நான் குழந்தையா இருந்தப்போ வந்த ஜோக் ரோஹினி! அந்த தியேட்டர் கதவுல ‘புல்’ன்னு எழுதி இருந்ததால இங்கிலீஷ் தெரிஞ்ச அந்த மாடு கதவை கடிச்சுதாம்!!!”

   

முகம் மலர புன்னகைத்த ரோஹினி, “உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு,” என்றாள் சாரதாவை பாராட்டுபவளாக!

   

“நாலு நாள் டிவி பார்த்தா உனக்கும் எல்லாம் தெரியும்... வா, நாம படம் ஏதாவது பார்ப்போம்...”

   

சாரதாவும், ரோஹினியும் அன்றைய நாளை டிவி பார்ப்பதும், கதைகள் பேசுவதுமாகவே செலவிட்டார்கள். சாரதா அவளுடைய இளம் வயது நாட்கள், திருமணம், கணவர், கலா, இரண்டு மகன்கள்... என தன்னை பற்றி சொன்னாள்.

   

ரோஹினி அரண்மனையில் இருப்பதற்கும், சாரதாவின் வீட்டில் இருப்பதற்குமான வேறுபாடுகளை பற்றி சொன்னாள்...

   

“அந்த விக்ரம் பத்தி சொல்லுடா... அவன் ரொம்ப பெரிய வில்லனா?”

   

“அவர் கெட்டவர் இல்லை... ம்மா... ஆனால் அவருக்கும் எங்க தீவு தான் முக்கியம். தீவுக்காக தான் என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கார்...”

   

ரோஹினி அவருக்கும்’ற்கு கொடுத்த அழுத்தம் சாரதாவிற்கு புரிந்தது. தன்னை தனக்காக ஒருவன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அதில் தவறில்லையே!

   

“ஓஹோ...” என சாரதா சொல்லவும், அவளின் முகத்தை பார்த்த ரோஹினிக்கு என்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.