(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தோன்றியதோ,

   

“தீவு முக்கியம்னு நினைக்குறதை நான் தப்புன்னு சொல்லலைம்மா... எனக்கும் எங்க நாடு பிடிக்கும்... எங்க தீவு எனக்கு ரொம்ப முக்கியமானதும் கூட... ஆனா, அதுக்காக மட்டும் கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பமில்லை! என் மேல அன்பும், அக்கறையும் இருந்து, நாட்டுக்காகன்னும் யோசிச்சால் பரவாயில்லை,” என்றாள்!

   

“புரியுதுடா! பேசாம நீயே உனக்கு பிடிச்ச ஒருத்தரை செலக்ட் செய்யக் கூடாதா?”

   

“அப்படி எல்லாம் செய்ய முடியாதும்மா. இளவரசிக்குன்னு நிறைய சட்டத் திட்டம் இருக்கு!”

   

“என்னவோ!!! சரி, பேசாம எங்க ஊரை போல உங்க ஊரிலேயும் இந்த ராஜா, ராணி எல்லாம் வேண்டாம்னு எலக்ஷன் வச்சிட வேண்டியது தானே?”

   

“மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க தீவுலேயும் ஜனநாயக அரசாட்சி முறை கொண்டு வரலாமான்னு கேட்டு அம்மா ஒரு ஓட்டுப் பதிவு நடத்தினாங்க. அதுல ஜனநாயக முறைக்கு மாறலாம்னு மூணு பேரு மட்டுமே ஒட்டு போட்டிருந்தாங்க. மீதி எல்லோருமே இப்போ இருக்க அரசாட்சியே போதும்னு சொல்லிட்டாங்க. அமைதியா, நல்லபடியா இருக்க முறையை மாத்த வேண்டாமாம்...”

   

“ம்ம்ம்ம்... உங்க ஊரு மக்கள் ரொம்ப நல்லவங்களா இருப்ப்பாங்க போல இருக்கே....!!!!! சரி, நீ கவலைப் படாதேடா! கடவுள் ஏதாவது வழி அமைச்சு கொடுப்பார்!”

   

✽✽✽

   

அன்று மாலை அஜய் வீட்டிற்கு வந்த போது, விஜய், சாரதா, ரோஹினி மூன்று பேரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

   

சாரதா மறுநாள் சமையலுக்கு வேண்டிய பீன்ஸை கட் செய்த படி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.