(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 46 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

மேஜை மீதிருந்த ஃபோனின் மீது பார்வையை வைத்தப் படி அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த நந்திதாவினுள் என்ன என்று சொல்ல முடியாத இன்ப பரபரப்பு இருந்தது...

   

உதய் காதலிப்பதாக சொன்னப்போது மறுத்து விட்டு... இப்போது எதிர்பாராமல் திடீரென முடிவாகி இருக்கும் இந்த திருமணத்திற்கு பிறகு உதயை நேரில் பார்க்க அவளுக்கு தயக்கமாக தான் இருந்தது...

   

ஆனால் பார்க்க வேண்டும் என்று ஆவலாகவும் இருந்தது...!

   

ஆஃபிஸ் என்ற போர்வையில் சந்திக்கலாம் என்றால், இப்போது அதற்கும் வாய்ப்பில்லை...!

   

அவளின் யோசனைக்கு நடுவே செல்ஃபோன் ஓசை எழுப்பியது. வேகமாக சென்று அதை கையில் எடுத்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே அது உதயின் அழைப்பு தான்.

   

தானாகவே மனசுக்குள் மகிழ்ச்சி மத்தாப்புக்கள் பூக்க, அழைப்பை ஏற்று,

   

“ஹலோ,” என்றாள்.

   

“ஹப்பா நதி... நீ எங்கே கால் அட்டென்ட் பண்ண மாட்டீயோன்னு நினைச்சேன்... சாரி நதி...”

   

உதயின் குரல் குழைந்து ஒலித்தது...! அதை ரசித்தப் படி,

   

“சாரியா? எதுக்கு சாரி?” எனக் கேட்டாள் நந்திதா.

   

“திடீர் கல்யாணம்... அந்த நியூஸ் வந்த உடனே நான் வேற ஏதேதோ பேசி எக்ஸ்ட்ராவா கிஸ் எல்லாம் கொடுத்தேன்... அதனால எப்படியும் கோபமா இருப்பேன்னு தெரியும்...”

   

கோபமா?

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.