“என்ன நீங்க சத்தியம்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க... சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்... நீங்க சொன்ன மாதிரி நானே மெல்ல தெரிஞ்சுக்குறேன்...”
“தேங்க்ஸ் நதி...”
“நான் வேற ஒரு கேள்வி கேட்கட்டுமா... உண்மையா பதில் சொல்வீங்களா???”
“ஹேய் ரொம்ப பில்ட் அப் கொடுக்குறீயே... அப்படி என்ன கேள்வி... சொல்லு...”
“நமக்குள்ளே இருக்க இந்த இரண்டு வருஷ வயசு வித்தியாசம் உங்களுக்கு பாவாயில்லையா?”
நந்திதாவின் குரலில் இருந்த தயக்கமே அவளின் மனநிலையை உதய்க்கு எடுத்து காட்டியது... அதை சீர் செய்து விடும் எண்ணத்துடன்,
“என்னது வயசு வித்தியாசமா? இந்த இரண்டு வயசு வித்தியாசம்ன்னு சொல்றது எல்லாம் ரெக்கார்ட் படி தான்... மத்தபடி இப்படி ஒரு சின்ன குழந்தையை கல்யாணம் செய்துக்கனுமேன்னு நான் யோசிக்குறேன்,” என்றான் ஈஸியாக!
“ஹலோ... இதெல்லாம் ரொம்ப ஓவர்... நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை...”
அவன் எதிர்பார்த்ததுப் போலவே, நந்திதாவின் குரலில் இப்போது தயக்கம் போய் ‘ஷார்ப்’ தொனி வந்திருப்பதை புரிந்துக் கொண்டாலும், காட்டிக் கொள்ளாமல்,
“எப்படி டென்ஷன் ஆகாமல் இருக்க முடியும் உதய்??ன்னு அன்னைக்கு எக்சிபிஷன்ல அழாத குறையா சொன்னது நீ தானே?” என்று அன்று பொருட்காட்சியில் நடந்ததை அவளுக்கு நினைவுப் படுத்தினான் உதய்!
“அப்படி சொன்னா சின்ன குழந்தையா?”