“ஆமாம்... வேற என்ன... துளசி எனக்கு கனவுல கூட கெட்டது நினைக்க மாட்டா... ஆன்ட்டியும் அப்படி தான்னு ஒரு நம்பிக்கை...”
“ஹ்ம்ம்... சரி.... எப்படியோ நீ என்னோட திருமதி ஆனால் எனக்கு சந்தோஷம் தான்... கல்யாணத்துக்கு முன்னாடி தான் லவ் செய்யனும்னு இல்லையே... கல்யாணத்துக்கு அப்புறம் கூட செய்யலாம்... நீ எப்படி உருகி உருகி என்னை லவ் செய்ய போற பாரேன்...”
இப்போதே அவளுக்கு அவன் மீது பிரியம் இருக்க தான் செய்தது... ஆனால் எதுவோ ஒன்று நந்திதாவை மனம் திறக்க விடாமல் தடுத்தது...
“என்ன, மேடம் அமைதியா இருக்கீங்க...”
“இல்ல... இப்போவே எதை கேட்டாலும் தெரிஞ்சு என்ன செய்ய போறேன்னு சொல்றீங்க... ஆனால் இப்படி எல்லாமும் கூட வசனம் பேசுறீங்களேன்னு யோசிக்குறேன்...”
“ஹேய் நதி... என்ன இப்படி சொல்லிட்ட... லைஃப் என்பது பெட் ஆஃப் ரோசஸ் இல்லை... கல்லு, முள்ளு, மண்ணுன்னு எல்லாமே இருக்குறது தான்... இப்போவே சீரியஸ் விஷயம் பேச வேண்டாமேன்னு நினைச்சேன்...”
“சரி அந்த டாபிக் வேண்டாம்... உங்களை பத்தி தெரிஞ்சுக்குறேன்... சொல்லுங்க...”
“நதி டார்லி... ப்ளீஸ்... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா தெரிஞ்சுக்கலாம், புரிஞ்சுக்கலாம்...”
“அப்படியா???”
“இங்கே பார் நதி, உன் கிட்ட சொல்ல கூடாததுன்னு என் கிட்ட எதுவுமில்லை... என்னை பத்தி நான் சொல்லி நீ தெரிஞ்சுக்குறதை விட, நீயே பழகி தெரிஞ்சுக்கனும்னு ஆசைப் படுறேன்... ஆனால் ஒன்னு சொல்றேன்... இனிமேல் என் லைஃப்புல எப்போதும் எதுக்கும் உன்னை முன்னாடி வச்சு தான் எதையும் செய்வேன், யோசிப்பேன்... இது சத்தியம்...”