அவளுக்கு கோபப் பட வேண்டும் என்று தோன்றக் கூட இல்லையே...!
இப்போது உதய் சொன்னப் பிறகு தான் கோபித்திருக்க வேண்டுமோ என்ற கேள்வி அவளுள் எழுந்தது!
நந்திதா யோசித்துக் கொண்டிருக்க, உதய் பேசிக் கொண்டே போனான்...
“...ஃபோன் எடுக்க மாட்டீயோன்னு கூட நினைச்சேன்... பரவாயில்லையே...”
“ம்ம்ம்ம்...”
“சரி அதை விடு... நீ இப்போ என்ன செஞ்சுட்டு இருந்த?”
ஃபோனில் அழைப்பு வந்தப் போது யோசித்துக் கொண்டிருந்த விஷயத்தின் நினைவில் உதட்டில் தோன்றிய புன்னகையுடன்,
“உங்களை பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன்... எப்படி இந்த கல்யாணத்துக்கு உங்க அம்மாவை சம்மதிக்க வச்சீங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்,” என்று பாதி உண்மையையும், பாதி பொய்யையும் சொன்னாள் நந்திதா.
“அதை தெரிஞ்சு என்ன செய்ய போற? அதை விடு... எனக்கு அதை விட முக்கியமான ஒரு சந்தேகம் இருக்கு... மஹாராணி கிட்ட நான் ப்ரொபோஸ் செய்தா என்னை பிடிக்காதுன்னு சொல்வீங்க, ஆனா அம்மா ஓகேன்னு சொன்னா அடுத்து செகன்ட் சரின்னு தலையை ஆட்டுவீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவரா தானே இருக்கு?”
“நான் ஒன்னும் சரின்னு தலையை ஆட்டலை... துளசியும், ஆன்ட்டியும் சரின்னு சொல்ல சொன்னாங்க...”
“ஓ! அப்போ அவங்க கம்பல் செய்ததுக்காக தான் நீங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க???”