“சரி, அது இல்லை... ஆனால் அன்னைக்கே சர்க்யூட் வொர்க் ஆகிடுச்சுன்னு குதிச்சது எ...”
அவன் பேசி முடிக்க காத்திருக்காமல்,
“இதெல்லாம் அநியாயம்... சந்தோஷப் படக் கூடக் கூடாதா???” என்று கேள்வி கேட்டாள் நந்திதா.
“சரி... அப்படி சந்தோஷப் பட்டா என் கைல இருக்க கையை இழுத்து எடுத்துக்கனும்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன?”
அன்றைய நாளின் நினைவில் உதட்டை கடித்துக் கொண்ட நந்திதா, அமைதியாக இருந்தாள்...
“நான் சொல்லியே ஆகனும்... உன் கை சூப்பர் சாஃப்ட் நதி...”
கன்னங்கள் சூடாக, ஒன்றும் சொல்லாமல் இருந்தாள் நந்திதா!
“ஹலோ??? என்ன மேடம் அமைதியா இருக்கீங்க???”
“தூக்கம் வருது உதய்... அப்புறம் பேசட்டுமா?”
“ஹேய்... பொய் தானே சொல்ற?”
“ஹுஹும்... நிஜமாவே தூக்கம் வருது...”
“சரி, ஓகே, தூங்கு தூங்குமூஞ்சி நந்திதா... நாளைக்கு ஆஃபிஸ்ல மீட் செய்யலாம்...”
“அதெல்லாம் மீட் செய்ய முடியாது...”
“ஏன் முடியாது?”