(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

அதை பற்றி யோசித்தப் படி, மூடி இருந்த கதவை மெல்ல தட்டினாள்.

   

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கதவை தட்டியப் பிறகும் உள்ளிருந்து பதில் இல்லாமல் போகவே, அழுத்தமாக கதவை தட்டினாள்!

   

அப்போதும் ஒரு பதிலும் இல்லை...

   

ஆனாலும் ‘அப்பா’ என்று அழைத்து கதவை தட்ட ரேஷ்மிக்கு மனம் வரவில்லை!

   

அவள் இடிப்பதை போல கதவை தட்டும் சத்தம் கேட்டு, முதல் மாடியில் இருந்து மேலே எட்டிப் பார்த்த விமல்,

   

“என்ன செய்ற ரேஷ்மி?” என்றுக் கேட்டான்.

   

“சித்தி எழுப்ப சொன்னாங்க சித்தப்பா,” என்றாள் அவள் மொட்டையாக!

   

மாடி ஏறி வந்த விமல், கதவருகே சென்று, “அண்ணா,” என்று அழைத்தான்!

   

இப்போதும் உள்ளிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

   

ஒரு நிமிட முயற்சிக்கு பின் தன் பலத்தை கொண்டு கதவை தள்ள முயன்றான் விமல். அவனின் தொடர் முயற்சியில் அந்த பழைய கதவின் தாழ்ப்பாள் உடைந்து விழ, கதவு திறந்துக் கொண்டது!

   

உள்ளே, கட்டிலில் படுத்திருந்த கமலிடம் அப்போதும் எந்த அரவமுமில்லை.

   

விமல் அண்ணனை நோக்கி செல்ல, ரேஷ்மி பல வருடங்களுக்கு பின் பார்க்கும் அந்த அறையை கண்களால் சுற்றிப் பார்த்தாள்.

   

அவளுக்கு அரைகுறையாக நினைவில் இருப்பது போலவே, அந்த அறை மாற்றம் இல்லாமல் 

2 comments

  • Hi Sis, when will you update the next episode am eagerly waiting for a long time, want to know what kamal dairy explains, pls update the episode, my request

    • Hi Sis! 🤗 Thank you so much for your excitement! The next two episodes are already up. Hope you enjoy them! Can't wait to hear your thoughts. 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.