(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

முன் தினம் திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம் அவளின் மனதில் மீண்டும், மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

   

✽✽✽

   

ரேஷ்மி – ஷ்யாம் திருமண சடங்குகளை விமலும் அவனின் மனைவியுமே முன் நின்று செய்ததில் ஹேமாவிற்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஆனால் கமல் கண்ணில் படாமலேயே இருந்தது அவளுக்கு மீண்டும் சுமித்ராவின் கவலையை நினைவுக்கு கொண்டு வந்து வருத்தத்தைக் கொடுத்தது.

   

அதனால் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க மனம் வராமல்,

   

“கமல் எங்கே ஆன்ட்டி இங்கே எங்கேயுமே காணும்???” என்று பூங்கோதையிடம் கேட்கவும் செய்தாள்.

   

“அதை ஏன் கேட்குற ஹேமா, கல்யாண வேலை, ஜவுளி எடுக்குறதுன்னு கேட்டதுக்கு வர முடியாதுன்னு அப்படி கத்துறான்! அவனுக்கு வேலை இருக்காம், நாங்க பொறுப்பா நடக்கனுமாம்! அவனை பத்தி தெரியாதா என்ன!”

   

ஹேமா யோசனையுடன் நிற்க, பூங்கோதையே தொடர்ந்தாள்!

   

“சின்ன வயசுல இப்படி இருந்தா பரவாயில்லை, வயசானாலும் மாறவே மாட்டேங்குறான்... என்ன செய்றது... ரேஷூ வெறுத்துப் போய் அவனை எதுக்கும் கூப்பிடவே கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டா...”

   

இவனை எந்த வகையில் சேர்ப்பது! ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான்?

   

மனதில் ஓடிய கேள்வியுடன் கமலை கண்களால் தேடினாள் ஹேமா. அவன் கூட்டம் குறைவாக இருந்த பகுதியில் ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருப்பது அவளின் கண்ணில் பட்டது.

2 comments

  • Hi Sis, when will you update the next episode am eagerly waiting for a long time, want to know what kamal dairy explains, pls update the episode, my request

    • Hi Sis! 🤗 Thank you so much for your excitement! The next two episodes are already up. Hope you enjoy them! Can't wait to hear your thoughts. 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.