(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

ஆனால் அதை புரட்டி பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை!

   

மீண்டும் அவளின் கண்கள் படுக்கையில் இருந்த அப்பாவிடம் சென்றது! இத்தனை நாட்களாக அவளிடம் பாசத்தை காட்டவில்லை என்றாலும் அப்பா என்று சொல்லவாவது உறவு இருந்தது! இனி...??? மனதுள் பாரம் அழுத்த, அங்கேயே அதிர்ந்துப் போய் அமர்ந்தாள் அவள்!

   

✽✽✽

   

கமலின் எதிர்பாராத மரணத்தினால் திருமண வீடு சட்டென களை இழந்துப் போனது!

   

என்ன தான் கமலின் சிடு சிடு குணத்தால் அவனை விட்டு விலகி இருந்தாலும், பூங்கோதை, விமல் மற்றும் கவிதாவால் அவனின் இந்த திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

   

தான் ஆடா விட்டாலும் சதை ஆட தானே செய்யும்!

   

அதிலும் பூங்கோதையின் மனம் உடைந்துப் போயிருந்தது.

   

பத்து வருடங்களுக்கு முன் இறந்திருந்த அவளின் கணவன் எடுத்து செய்திருக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் இளவயதிலேயே எடுத்து செய்த கமலின் பொறுப்புணர்ச்சியை சொல்லி, சொல்லி அரற்றிய படி அழுதுக் கொண்டிருந்தாள் அவள்.

   

கமல் மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவர்களின் குடும்பம் என்னவாகி இருக்கும், அவர்களின் நிலை என்ன ஆகி இருந்திருக்கும் என்ற நினைவுகளில் அவனின் தம்பி தங்கையும் நன்றி உணர்வுடன் அழுதனர்.

   

கமல் உயிருடன் இருந்த போது அவனை ஹிட்லர் என்று அழைத்து அலுப்புடன் பேசியவர்கள், இப்போது அவனின் பிரிவை எண்ணி வருந்தி அழுதார்கள்.

   

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஹேமாவின் மனம் சுட்டது!

   

2 comments

  • Hi Sis, when will you update the next episode am eagerly waiting for a long time, want to know what kamal dairy explains, pls update the episode, my request

    • Hi Sis! 🤗 Thank you so much for your excitement! The next two episodes are already up. Hope you enjoy them! Can't wait to hear your thoughts. 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.