(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

அப்படியே இருப்பதாக அவளுக்கு தோன்றியது!

   

அறையின் நடுவே இருந்த அம்மாவின் படம் மட்டுமே புதிதாக அங்கே இருப்பதாக அவளுக்கு தோன்றியது. 

   

ரேஷ்மி அறையை பார்த்துக் கொண்டிருக்கும் போது,

  

"அண்ணா, உடம்பு சரியில்லையா???" என்று கேட்டப்படி கமலை மெல்ல தொட்டு எழுப்ப முயன்ற விமல், அவனின் உடல் சில்லிட்டு போயிருப்பதை உணர்ந்து தீயை தொட்டு விட்டவனை போல திகைத்து போய் கையை எடுத்தான்!

   

விமலின் அசைவை உணர்ந்து அந்த பக்கமாக பார்த்த ரேஷ்மி, 

   

“என்ன சித்தப்பா?” என்றுக் கேட்டுக் கொண்டே விமலின் அருகே சென்று படுக்கையில் இருந்த தன் அப்பாவின் கையை தொட்டுப் பார்த்தாள்.

   

சில்லென்று அவளின் கையில் பரவிய உணர்வு அவளுக்கும் கமலின் நிலையை சொல்ல, அவளுள் எதுவோ உடைந்தது...

   

“அப்பா!” என்ற மெல்லிய சத்தம் அவளின் உதடுகளில் இருந்து அவளையும் அறியாமலே வெளியே வந்தது.

   

கமலின் அருகே ஃபேன் காற்றில் பக்கங்கள் திரும்பி பட படத்துக் கொண்டிருந்த சின்ன டைரி ஒன்று அப்பாவையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மியின் கண்ணில் பட்டது.

   

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பேனாவால் புக் மார்க் செய்து வைக்கப் பட்டிருந்த பக்கம் திறந்து காற்றில் படபடத்தது!

   

என்றென்றும் உன்னுடன்’ என்று அதில் எழுதி இருந்தது அவளின் கருத்தை கவர்ந்தது.

  

எனன் செய்கிறாள் என்ற உணர்வே இல்லாமல் அந்த டைரியை கையில் எடுத்தாள் ரேஷ்மி! 

2 comments

  • Hi Sis, when will you update the next episode am eagerly waiting for a long time, want to know what kamal dairy explains, pls update the episode, my request

    • Hi Sis! 🤗 Thank you so much for your excitement! The next two episodes are already up. Hope you enjoy them! Can't wait to hear your thoughts. 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.