(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 47 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

”என்னடி கேட்ட, நியாயம் வேணுமா உனக்கு, ஒருத்தன் உன் கழுத்தில கத்தி வைச்சிருக்கான், சாவு பயம் வரலையா உனக்கு, இந்நேரம் வேற யாரா இருந்தாலும் உயிர்தான் முக்கியம்னு தப்பிச்சா போதும்னு ஓடுவாங்க, நீ என்னடான்னா திரும்ப திரும்ப நியாயம் வேணும் நியாயம் வேணும்னு என் உயிரை எடுக்கறியே, நீ சொல்ற நியாயத்தை என்னால செய்ய முடியாதுடி போதுமா இங்கிருந்து போயிடு” என பொங்கி வீடு அதிர கத்தினான். அவளோ அவனின் அந்த கோபத்தைக் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே தைரியமாக அவனிடம் பேசினாள்

   

”நான் போக மாட்டேன், எனக்கு நியாயம் வேணும், உன்னாலதான் என் வாழ்க்கை இந்த நிலைமைக்கு வந்துச்சி, என் கல்யாணம் நின்னு போச்சி, என்னை எல்லாரும் அவமானப்படுத்தினாங்க, எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி, என் குடும்பமே என்னை நினைச்சி கவலையில இருக்கு, அவங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட அநியாயத்துக்கு கண்டிப்பா நீ நியாயம் வழங்கித்தான் ஆகனும்” என்றாள் சத்தமாக அதைக் கேட்ட தில்லையோ தன் உடலில் கத்தியால் கீறப்பட்ட இடத்தில் வழிந்த ரத்தத்தை விரலில் ஒற்றி எடுத்து பார்த்து அவளிடம் காட்டி

   

”பாரு விட்டிருந்தா என்னை கொன்னுருப்பான், நீ வராம இருந்திருந்தா அந்த ரவியை உயிரோடவாவது விட்டிருப்பேன், அவனும் இப்படி மண்ணுக்குள்ள போயிருக்க மாட்டான்”

   

”யாரு செத்தாலும் எனக்கு கவலையில்லை, நீ செத்தாலும் நான் கவலைபப்ட மாட்டேன், எனக்கு நியாயம் வேணும்” என கத்த அவனோ

   

”யார் செத்தாலும் உனக்கு கவலையில்லையா”

   

”ஆமாம்”

   

”நான் செத்தாலும் நீ கவலைப்படமாட்ட”

   

”மாட்டேன்”

   

”உனக்கு நான் நல்லது செஞ்சா அதுக்கு நீ நன்றி சொல்லனும் ஆனா, விசயத்தை புரிஞ்சிக்காம 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.