என்கிட்ட வந்து என்கூடவே எல்லா இடத்துக்கும் வந்து பிரச்சனையில நீ மாட்டி என்னையும் மாட்டிவிட்டு உன்னை காப்பாத்த நான் போராடி கத்திகுத்தி வாங்கியும் உன் மனசு இளகலையா”
”இல்லை நீ செஞ்ச பாவத்துக்குத்தான் உனக்கு இப்படியெல்லாம் நடக்குது”
”ஓ அப்புறம்”
”எனக்கு நியாயம் வேணும், நீ கொடுத்துடு, நான் கிளம்பறேன் எனக்கொன்னும் உன்கூட இருக்கனும்னு ஆசையில்லை”
”எனக்கும் உன்னை என்கூடவே வைச்சிக்கனும்னு ஆசையில்லை”
”அப்புறம் என்ன, எனக்கான நியாயத்தை சொல்லு” என சொல்ல அவனோ
”சொல்ல முடியாதுடி”
”அப்ப உன்னை விட்டு நான் போக மாட்டேன்“
”என்கூட இருந்தா உன் உயிருக்கும் ஆபத்து, உன்னால என் உயிருக்கும் ஆபத்து வரும்”
”எனக்கு எதுவும் ஆகாது, அப்படியே என்னால உனக்கு ஆபத்து வந்தாலும் நான் சந்தோஷப்படுவேன், என் வாழ்க்கையை அழிச்சதுக்கு கடவுள் உனக்கு நிச்சயம் தண்டனை தருவாரு”
”தண்டனையா என்ன தண்டனை எனக்கு என்ன நேரும்னு எதிர்பார்க்கற”
“எது வேணும்னாலும்”
”அப்ப நான் செத்தா நீ சந்தோஷப்படுவியா”