”கண்டிப்பா”
”என்மேல உனக்கு இரக்கமே இல்லையா, இத்தனை நாள் என்கூட இருக்கற, உன்னை நான் ஏதாவது செஞ்சிருப்பேனா அதுல இருந்தே நான் நல்லவன்னு உன்னால நினைக்க முடியலையா“
”முடியலை” என சொல்ல அதில் அவனுக்கு கோபமே வந்தது, அவளிடம் தர்க்கம் புரிந்தான், அவளும் அவனுக்கு சரிக்கு சமமாக வாதாடினாள். தில்லை எவ்வளவோ எடுத்துரைத்தும் சம்யுக்தா மனம் இறங்காமல் சண்டையை பெரிதாக்கினாள். இதில் தில்லையை வேறு அவமானமாக பேசிவிட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவளிடம் இருந்த தாலியை பிடுங்கியவன்
”உனக்கு நியாயம்தானே வேணும்” என சொல்லிக் கொண்டே அவளின் கழுத்தில் தாலியை கட்டிவிட அவளுக்கு திக்பிரமையாக இருந்தது
”எனக்கு தெரிஞ்ச நியாயம் இதுதான்டி, உனக்கு நான் நியாயம் வழங்கிட்டேன், இனி உன்னால ஆனதை பார்த்துக்க” என கோபமாக சொல்லிவிட்டு ஓய்ந்தான் அதற்கு மேல் அவளால் பேசவே முடியவில்லை.
கழுத்தில் தில்லை கட்டிய தாலி இருக்கவே உடல் அதிர்ந்துவிட்டது அவள் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள், ஒருவழியாக அந்த வீடு அமைதியாகிவிடவும் சித்தன் சாப்பாடு கொண்டு வந்தான், கதவு சாத்தப்பட்டிருக்கவும், திறக்க முடியாமல் போகவும் வெளியில் நின்றபடியே குரல் தந்தான்.
”அண்ணா உள்ள வரலாமாண்ணா, கொஞ்சம் கதவை திறண்ணா” என சொல்ல தில்லையும் சற்று அமைதியாகியிருந்தான். அதனால் சித்தனிடம்
”என்ன விசயம்” என கேட்க
வாசலில் இருந்த சித்தனோ