”சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் அண்ணா”
”அதை அங்கயே வைச்சிட்டுப் போ” என கத்த அவனோ
”அண்ணா கத்தாதண்ணா, மத்த வீட்ல இருக்கறவங்க எல்லாம் கோச்சிக்கறாங்க, அவங்களால நிம்மதியா டீவியில வர்ற சீரியல் கூட பார்க்க முடியலையாம், உன்னை அமைதியா சண்டை போட சொன்னாங்கண்ணா”
”சரி சரி நீ போ” என சொல்ல சித்தனும் சென்றுவிட்டான்
தரையில் அமர்ந்திருந்த சம்யுக்தாவை கண்டு ஆழமாக மூச்சுவிட்டு
”உனக்கு நான் நியாயம் வழங்கிட்டேன், சாப்பிட்டு உன் ஊரை பார்த்துட்டு கிளம்பி போயிடு, இனி இங்க ஒரு நிமிஷம் கூட நீ இருக்க கூடாது புரியுதா, உன் முகத்தை கூட நான் பார்க்ககூடாது கிளம்பு” என கோபமாகச் சொல்லிவிட்டு கதவை திறந்துவிட்டு வெளியில் இருந்த சாப்பாட்டை எடுத்து உள்புறம் அவள் இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான்.
சம்யுக்தாவோ நடந்த சம்பவத்தால் உடல் அதிர்ந்துப் போனாள். அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை, கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றிக் கொண்டிருந்தது அவளை சமாதானம் செய்யக்கூட ஆளில்லை, அவள் எதிர்பார்த்த நியாயம் இது அல்ல தனக்கு மீண்டும் தில்லையால் அநியாயம் நடந்துவிட்டதை நினைத்து கலங்கிப் போனாள்.
இடைவேளை
சம்யுக்தாவிற்கு தில்லை தாலி கட்டிய விதத்தைக் கேட்டதும் சிதம்பரத்தால் பொறுக்க முடியவில்லை, தனது கட்டுப்பாட்டை இழந்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்றான். அவனால் உட்கார இயலவில்லை சட்டென எழுந்து நின்றான். அவனது கோபத்தைக் கண்ட சம்யுக்தாவும் சிவசங்கரனும் கூட குழப்பத்துடன் எழுந்து நின்றார்கள்.