“தாடி மீசை வரைஞ்சது எப்படியும் நீயோ நானோன்னு அவங்களுக்கும் தெரியும். கேட்டா சும்மா ஜாலியா செஞ்சேன்னு சொல்லு. அம்மாவை பத்தி உனக்கே தெரியுமே. சும்மா சிரிச்சுட்டு விட்ருவாங்க!”
“அவங்க விட்ருவாங்க... உங்க அண்ணா???”
“அவன் எரிஞ்சு தான் விழுவான். ஏதாவது சொன்னா, ஆஃபிஸ் போறப்போ தாடி மீசை வச்சு விட்ருவேன்னு பயமுறுத்து!”
“ஹாங்!”
“சும்மா பேச்சுக்கு சொல்லு ரோ! நான் காலேஜ் படிச்சப்போ, ஹாஸ்டல் வார்டன் முகத்துல இப்படி தான் வரைவேன்!”
“அவர் உங்களுக்கு தண்டனை எதுவும் கொடுக்கலையா?”
“நான் செய்தேன்னு அவருக்கு தெரியாதே! நீ பயப்படாதே ரோ! நான் இருக்கேன். காலைல அஜய் கத்தும் போது நான் உனக்கு சப்போர்ட் செய்றேன். டோன்ட் வொர்ரி!”
ரோஹினிக்கு இப்போதும் தயக்கமாக தான் இருந்தது... ஆனாலும் அவளுக்குள் ஒளிந்திருந்த அட்வென்ச்சர் பிரியையான ‘இன்னொரு’ ரோஹினிக்கு விஜய் சொன்னதை செய்ய வேண்டும் என்று ஆவல் பொங்கியது!
மையினால் கிறுக்கப் பட்டிருக்கும் மீசை, தாடியை பார்க்கும் போது அஜயின் முகம் எப்படிப் போகும்...!!!! தெரிந்துக் கொள்ள அவளுக்கு ஆர்வமாக தான் இருந்தது!!!
“சரி, நான் செய்றேன்,” என்றாள் அதே ஆர்வம் குரலிலும் எதிரொலிக்க!
✽✽✽