(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து ரோஹினிக்கு மூச்சை அடைத்தது!

   

“என்ன செய்துட்டு இருக்க நீ?”

   

அஜய் எப்போதும் போல கடுமையான தோரணையில் கேள்வியை கேட்க, ரோஹினி தடுமாறினாள்...

   

அந்த தடுமாற்றத்தில் அவள் பேலன்ஸ்க்காக இடதுக் கையால் பிடித்திருந்த மேஜையின் முனை வழுக்கியது... அதனால் அவளின் இடதுக் கை ஒரு பக்கமாக செல்ல, அந்த அசைவின் எதிர்வினையாக குனிந்திருந்த அவளின் உடல் எதிர் திசையில் சென்றது!

   

( நியூட்டன்’ஸ் 3rd லா படிச்சிருப்பீங்களே! Every action has equal and opposite reaction!!! – நான் அவருடைய லா’வை இப்படி யூஸ் செய்வேன்னு அவர் கனவிலேயும் நினைச்சிருக்க மாட்டார்!!! )

   

ரோஹினி சமாளிக்கும் முன் அவளின் முகம் நேராக அஜயின் முகத்தில் போய் மோதியது...

   

அவளின் இதழ்கள் மிகச் சரியாக அவனின் இதழ்களின் மேலே சென்று அழுத்தமாக மூடியது.

   

நடப்பது ஒன்றும் புரியாமல் அவள் அப்படியே இருந்தாள்! அதிசயத்திலும், அதிசயமாக அஜயும் அசையவே இல்லை!!!!!!

   

அஜயும், ரோஹினியும் அந்த மந்தகாச மௌன நிலையில் இருந்தது ஒரு சில வினாடிகளாகவும் இருக்கலாம்... சில நிமிடங்களாகவும் இருக்கலாம்... 

   

அவர்கள் இருவரில் முதலில் உணர்வுப் பெற்ற அஜய், ரோஹினியை வலுக்கட்டாயமாக அவனை விட்டு தள்ளினான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.