“எனக்கு கல்யாணம் வேண்டாம் அத்தை. நான் வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்.”
“பாப்பா? உன் அப்பா சொத்தை எல்லாம் கரைச்சுட்டா, நான் உன்னை விட்ருவேனா? இந்த அத்தை இருக்குற வரைக்கும் உன்னை கஷ்டப்பட விட மாட்டேன்.”
புவனேஸ்வரி சித்ராவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
“உங்க அன்பு எனக்கு தெரியும் அத்தை. எனக்கு அதென்னவோ கல்யாணம்னு யோசிச்சாலே வேப்பங்காயா கசக்குது. நினைக்க கூட பிடிக்க மாட்டேங்குது. வேலைக்கு போய் நானே என் சொந்தக் கால்ல நிக்கனும்னு நினைக்கிறேன் அத்தை.”
“உனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை இருந்தா நானே உன் மாமா கிட்ட சொல்லி உனக்கு வேலை வாங்கி தர சொல்றேன். அதுக்காக ஏன் கல்யாணம் வேண்டாம்னு எல்லாம் சொல்ற? உலகத்துல இருக்க எல்லா ஆம்பளைங்களும் உன் அப்பா மாதிரி கிடையாது. உன் மாமா போல நல்லவங்களும் இருக்காங்க.”
புவனேஸ்வரி அமைதியாக இருந்தாள்.
“உனக்கு ஏத்த ராஜக்குமாரனை நான் கண்டுப்பிடிக்க தான் போறேன். நீ சந்தோஷமா வாழுறதை பார்க்க தான் போறேன்,” என்றாள் சித்ரா.
புவனேஸ்வரி இப்போதும் வாயே திறக்கவில்லை!
✽✽✽