சித்ரா மீண்டும் அண்ணனும் கணவரும் இருந்த இடத்திற்கு வந்த போது, சுரேஷ் பரமசிவத்தை வழிக்கு கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.
“நான் சொல்றதை கேளுங்க மச்சான். இப்போ இருக்க நிலைமைல இந்த பெரிய பங்களால நீங்க தங்கி இருந்து பார்த்துக்குறது வெள்ளை யானையை மேய்க்குறது மாதிரி. நடக்கவே முடியாத ஒன்னு. உங்க கௌரவம் எவ்வளவு முக்கியம்னு எனக்கும் தெரியும். அதனால கொஞ்ச நாளைக்கு ஊட்டில இருக்க எங்க பங்களால போய் தங்கி இருங்க.”
“ஊட்டிலயா? அப்போ இந்த பங்களாவை யார் பார்த்துக்குறது?”
“ஒரு சினிமா ஷூட்டிங்குக்கு பெரிய பங்களா வேணும்னு கேட்டாங்க. இந்த பங்களாவை அவங்களுக்கு வாடகைக்கு கொடுத்தா கை நிறைய காசு கிடைக்கும்.”
“காசு வரும் சரி மச்சான், ஆனா ஊரு என்ன பேசும்? பரமசிவம் பணத்துக்காக வீடை வாடகைக்கு விட்டுட்டான்னு பேச மாட்டாங்களா?”
“அது தான் கிடையாது. உங்களுக்கு ரெஸ்ட் வேணும்னு டாக்டர் ஊட்டிக்கு போக சொல்லிட்டாருன்னு சொல்லிடுவோம். இந்த படத்துக்கு பெரிய குடும்பத்து வீடு வேணும்னு கேட்டாங்க அவங்களுக்கு உதவ நீங்க கொடுத்திருக்கீங்கன்னு உங்களுக்கு நல்ல பேரு கிடைக்குற மாதிரி நான் பார்த்துக்குறேன்.”
பரமசிவம் மீசையை முறுக்கி கொண்டு யோசித்தார்.
சுரேஷ் அவராகவே முடிவை சொல்லட்டும் என்று காத்திருந்தார். பரமசிவத்தை இந்த ஊரில் இருந்து கிளப்பி புதிய ஊருக்கு அனுப்புவது