முக்கியம் என்று சுரேஷும் சித்ராவும் முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில் இந்த சினிமா படப்பிடிப்பு பற்றி தெரிய வரவும் சுரேஷ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து லாபகரமான திட்டமாக மாற்றி இருந்தார்.
“ஊட்டில உங்க பங்களால தங்கிக்கலாம்னு சொல்றீங்க?” என்றார் பரமசிவம் யோசனையுடன்!
“ஆமாம் மச்சான். அங்கே சமையல் செய்ய, வீட்டை கவனிச்சுக்க ஆளுங்க இருக்காங்க. நீங்க போய் ராஜா மாதிரி இருக்கலாம். ரெஸ்ட் எடுக்கலாம். வீட்டுலேயே லைப்ரரி, ஹோம் தியேட்டர் எல்லாம் இருக்கு. பக்கத்துல நம்ம எஸ்டேட் கூட இருக்கு,” என சுரேஷும் பரமசிவத்திற்கு ஏற்ற விதத்தில் ‘ஹைப்’ கொடுத்தார்!
பரமசிவத்திற்கு சுரேஷ் சொல்லும் பங்களா எப்போதுமே பிடிக்கும்! அங்கே போய் முதலாளியாக ராஜ்ஜியம் நடத்தினால் நன்றாக தான் இருக்கும் என் தோன்றவும், “அப்போ சரி மச்சான். புவனேஸ்வரியும் நானும் ஊட்டிக்கு கிளம்புறோம்,” என்றார் உற்சாகமாக!
“புவனேஸ்வரி எங்க வீட்டுல தங்கி இருக்கட்டும்ண்ணா. அவ வேலைக்கு போக ஆசைப்படுறா. நீங்க ஊட்டில தங்கி இருக்க நேரத்துல அவ இங்கே எங்க கூட இருந்து வேலைக்கு போகட்டும்,” என சித்ரா புவனேஸ்வரியின் ஆசையை நேரம் பார்த்து அண்ணனிடம் சொன்னாள்.
“வேலைக்கா?” என்றார் பரமசிவம் எரிச்சலுடன்!
சுரேஷிற்கும் சித்ரா சொன்னது நல்ல ஐடியாவாக தெரிந்தது. இந்தக் காலத்தில் பெண்கள் சுயமாக சம்பாதிப்பது அவசியம் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. அதே நேரத்தில் புவனேஸ்வரி பரமசிவத்தை விட்டு தள்ளி இருப்பது அவளுக்கும் நல்லது என்றும்